15. முதல் நீ.. முடிவும் நீ

15. முதல் நீ.. முடிவும் நீ
0

நட்புக்குள்ள சண்டை வரது சகஜம் தான் ஆனா பொறாமை வர கூடாது, உதீப்க்கு அதான் வந்து இருக்கு அதும் இத்தனை வருஷம் பழகின அஜய் மேல, விசுக்கும் - சசிக்கும் அஜய் மேல தான் பிரியம்.

அவன் இப்போ ஊரில் இல்லைன்னு கொஞ்சம் கூடுதலான அக்கறையும் அன்பும் வெச்சு இருந்தாங்க, அதுக்கு காரணம் விஜி அதே அளவு அவங்க மூணு பிள்ளைங்கலான ரிஷி, கவி, சரண் மேல வெச்சு இருந்த பாசம் தான் காரணம். சசிக்கும் விஜிக்கும் எல்லாமே ஒன்னு, ஆனா உதீப் வீட்டில் அப்படி இல்லை.

வெளி ஆளுங்க யார் கூடவும் உதீப் அம்மா பழக மாட்டாங்க, அவங்களுக்கு காசு பணம் ரொம்ப முக்கியம். கவி வயசுக்கு வந்த விசேஷசத்துக்கு கூப்பிட்டு கூட வரல, சசிக்கு உதீப் மேல பெருசா அன்பு இல்ல. ஆனா அக்கறை இருந்தது.

உதீப் நிலை வேறு, அவனுக்கு அஜய் தான் நண்பன். எட்டாம் வகுப்பில் இருந்து நண்பன். இன்றைய தேதிக்கு கணக்கு பார்த்தா எழு வருட நட்பு ரெண்டு பேருக்கும், உதீப் மேல அஜு ரொம்ப நட்பா தான் இருந்தான். கவியை பார்த்த பின்னாடி அவன் நடவடிக்கையில் மாற்றம். அஜு ரிஷியை சாக்கு வெச்சு கவியை பார்க்க போனான். ஆனா உதீப் அதை ரிஷி தப்பா நினைச்சான். இங்க தான் வந்தது குழப்பம். ரிஷி பொதுவாக ரெண்டு பேர்க்கிட்டயும் ஒரே மாதிரி தான் இருக்கான்.

ரிஷியும், உதீப்பும் பணக்கார வீட்டு பிள்ளைங்க, அதனாலேயே உதீப் அம்மா அவனை நல்லா கவனிச்சாங்க, ஆனா அஜுக்கு இது வரை இந்த மரியாதை கிடைச்சது இல்லை. ரிஷியின் நட்பு உதீப்க்கு இப்போ முக்கியம், ரெண்டு பேரும் ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு.

அஜு வரும் போது எல்லாம் ரிஷி கவனம் அஜு மேல போய்டும், பேச கூட இருக்கமாட்டான். உதீப் விட ரிஷி வீட்டில் அஜுக்கு கிடைத்த மரியாதை, தன் பையன் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது எல்லாம் அவனுக்கு பிடிக்கவே இல்லை.

இதில் கல்லூரியில் தேவை இல்லாத சகவாசம், ரிஷியையும் உதீப்பையும் குடியில் தள்ளி இருந்தது. இன்று அனைவரும் ஒன்றாக விளையாட சென்றும் மதிய உணவுக்கு உதீப்புக்கு அழைப்பு இல்லை. அதில் அஜுவை மொத்தமாக வெறுத்து இருந்தான் உதீப். அஜுவின் நண்பர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட அவனுக்கு இல்லை என்று பெரும்கோவம், அதன் விளைவு தான் இன்று ரிஷியை அழைத்து கொண்டு ஒயின் ஷாப் வந்தது.

சண்டை பெரிதானது. அஜு பேச, உதீப் பேச என வளர்ந்து. இருவரையும் கோபத்தின் உச்சியில் நிறுத்தி இருந்தது. ஒயின் ஷாப் முன் நின்று சண்டை பார்ப்பவர் அனைவரும் அவர்களை நல்ல விதமாக பார்க்கவில்லை. உதீப் வார்த்தை தடித்தது. காசுக்கு தான் நீயும் உன் குடும்பமும் ரிஷியுடன் உறவாடி கொண்டு இருக்கீங்க என்று கூற, அஜய் கோவம் அதிகமாகி அவன் முழு பலம் திரட்டி அடித்து இருந்தான். கவின் தடுத்த நிலையில் அவனுடன் பேசி கொண்டு இருக்கும் போது சரண் வந்து சேர்ந்தான்.

அனைவரும் ஒரு முறைப்பை கொடுத்து அங்கு இருந்து கிளம்பி வீட்டின் பின் வர சொல்லி விட்டு ரிஷியை அழைத்து சென்றான். வீட்டின் பின் இருந்த இடத்தில் அனைவரும் சேர, யாதுவை எழுப்பி அழைத்து வந்தான் கவின்.

சரண்: " ரிஷி என்னடா சண்டை சாராய கடை முன்னாடி பொறுக்கிங்க மாதிரி, வர போற எல்லாரும் உங்களை தான் பார்த்தாங்க"

“கவின் நீ சொல்லு என்னாச்சு?”

கவின் விவரம் சொல்ல, சரண் ரிஷியை அடித்து இருந்தான்.

சரண்: " ஓ உனக்கு இந்த வயசுலயே போதை கேட்குதா? பீர் எதுக்கு? தண்ணி அடி போ, இப்போ பீர் காலேஜ் முடியும் போது கஞ்சா, பொண்ணுங்க இப்படி போக போறியா? வாய் திறந்து பேசு ரிஷி இல்லை அப்பாக்கிட்ட சொல்லி உன்னை என்ன செய்யனும் எனக்கு தெரியும்"

ரிஷி: " இல்ல அண்ணா இனி குடிக்க மாட்டேன், சத்தியமா மாட்டேன். அப்பாக்கு தெரிஞ்சா அவர் வளர்ப்பு தப்புன்னு சொல்லி மனசு விட்டுருவாரு"

சரண்: " இது தான் முதலும் கடைசியும் சொல்லிட்டேன், இனி எதாவது என் காதுக்கு வந்தா நான் என்ன செய்வேன் தெரியாது"

“டேய் உதீப் எதுக்குடா இப்படி பேசிட்டு இருக்க? மூணு பேரும் நண்பர்கள் தானே? எதுக்கு இப்போ இப்படி பேசிட்டு இருக்க?”

உதீப்: " எனக்கு ரிஷி தான் ப்ரெண்ட், அஜு இல்ல, அவன் ஒரு பஞ்சோந்தி. இன்னிக்கி உங்களுக்கு புரியாது நான் சொல்றது. ஒரு நாள் புரியும். ஆதாயம் இல்லாம இவன் இருக்க மாட்டான் எங்கையும், நல்லவன் வேஷம் எதுக்கோ தெரியல"

யாது: " டேய் தேவை இல்லாம பேசாத, நான் மனுஷனா இருக்க மாட்டேன், என்ன டா தெரியும் அவனை பத்தி உனக்கு?"

கவின்: " வேண்டாம் யாது, சண்டை வேண்டாம் விடு. அவன் பேசினா அஜய் மதிப்பு போய்டுமா? அவன் போதையில் எதோ ஒளரிட்டு போகட்டும்"

அஜய்: " சரண் அண்ணா, தண்ணி அடிக்க மாட்டோம், சிகரெட் பிடிக்க மட்டோம்ன்னு ரெண்டு பேரும் சத்தியம் பண்ண சொல்லுங்க, நாங்க போறோம். அப்புறம் இது கவி சாப்பாடு, ஆறி போய் இருக்கும், வேற வாங்கனுமா?"

சரண்: " அப்பா சாப்பாடு வாங்கிட்டு தான் போனாரு விடு. ரெண்டு பேரும் இனி பேசணும் தானே? நட்பு வேணும் தானே உதீப் என் தம்பி கூட அப்போ சத்தியம் பண்ணு"

இருவரும் சத்தியம் செய்து குடுக்க,

அஜய்: " உன் மனசில் ஏன் இப்படி ஒரு எண்ணம் உதீப்? நீ என் நண்பன் இல்லையா? எங்க டா தப்பு பண்ணினேன்?, என்னை தூக்கி எரிஞ்சுட்ட தானே? இனி நீ பேசாம நான் பேச மாட்டேன்"

உதீப்: " இனி என் வழியில் வரதே, அது உனக்கு நல்லது இல்லை"

பின் அனைவரும் அவரவர் இல்லம் சென்றனர். எல்லோருக்கும் வேறு வேறு உணர்வுகள். எல்லோருக்கும் ஒரு மன கவலை.

அஜு மனம் உடைந்து போய் வந்தான். அவன் அப்பா சாப்பிட்டு கொண்டு இருந்தார். உள்ளே சென்ற அவன் அவர் மடியில் படுத்து கொண்டான்.

கோபி: " சண்டை எல்லாம் முடிஞ்சுது தானே?, கவின் யாதுவை எழுப்பும் போதே கேட்டு தான் இருந்தேன். சின்ன பசங்க சண்டை அதான் நான் வரல, யார் எதோ சொல்லட்டும் உன்னை பத்தி எங்களுக்கு தெரியும். நல்லவனா வாழ தான் முடியும், எல்லாருக்கும் நிரூபிக்க முடியாது. அவனுக்கு அவ்ளோ தான் உன்னை தெரியும். புரிதலும் அன்பும் பெறாத உறவு முடிஞ்சு போய்டும். அதுக்காக அது தான் முடிவு என்று சொல்ல முடியாது. நாள் போக போக அன்பும் புரிதலும் வரும். அப்போ வருவான் உன்னை தேடி. இப்போ இதை எல்லாரும் கை கழுவிடுவோம் சரியா?"

கோபி கை கழுவி எழுந்து வர, அவர் மடியில் முகம் புதைத்து அழுதான். அவன் அழும் வரை விட்டு விட்டார். யாதுவும், கவினும் கூட கண் கலங்கி விட்டனர். அவன் அழுது முடித்து எழுந்து வர அவனை கவின் கட்டி கொண்டான்.

கவின்: " எனக்கு புரியுது உன் வலி, ஆனா நீ அழரதை பார்க்க முடியல அஜு, நாங்க இருக்கோம் டா உனக்கு மூணு பேரும் சாகும் வரை ஒன்னா இருப்போம்"

மூவரும் கட்டி கொண்டனர். அடுத்த நாள் சரண் கிளம்பு போது, கவி காதில் விஷயம் சொல்லி ரிஷியை கண்காணிக்கும் பொறுப்பை கொடுத்து சென்றான். கவி உதீப் சொன்ன வார்த்தை கேட்டு அவனை இனி வீட்டின் உள் விட வேண்டாம் என்று கூறி விட்டாள். அவள் வார்த்தை தானே அங்கே எல்லோருக்கும் முக்கியம்? உதீப் இதை இன்னும் வெறுத்தான். அஜு மீது பகை வளர்ந்தது.

காதல் வளரும்.