16. முதல் நீ.. முடிவும் நீ

16. முதல் நீ.. முடிவும் நீ
0

அஜு ஊருக்கு செல்லும் நாளும் வந்தது. அவன் கிளம்பி ரிஷியின் இல்லம் சென்றான். அன்று நடந்த பிரச்சனைக்கு பின்னர் இன்று தான் செல்கிறான். ரிஷி அப்போது தான் எழுந்து இருந்தான்.

ரிஷி: " வா டா, என்மேல கோவமா அஜு?"

அஜு: " ச்சா இல்லை டா, உதீப் ஏன் அப்படி? அதான் கவலையா இருக்கு"

ரிஷி: " சாரி அஜு, அவனை நான் சமாதானம் பண்றேன்"

அஜு: " சரி டா நான் கிளம்புறேன்"

அவன் கண்களோ கவியை தேடியது.

ரிஷி: " அப்பா உள்ள இருக்கார் சொல்லிட்டு போ, வீட்டுக்குள்ள வரமா போற என்ன டா பழக்கம் இது புதுசா?"

அஜு உள்ளே செல்ல, கவி அவள் அறையில் இருந்து இரவு உடையில் வந்தாள். அவனை பார்த்து கொண்டு அவள் மென்னகை தர,

அஜு: " உடம்பு எப்படி இருக்கு கவி?
அப்புறம் நான் போய்ட்டு வரேன், நல்லா படி சரியா?"

கவி: " பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க, அந்த உதீப் பேசினதை யோசிச்சு இங்க வராம இருக்காதீங்க"

விசு: “சரியா சொன்ன கவிம்மா, என்ன அவன் சொன்னது தான் உண்மையா அஜய், வீட்டுக்கு வராது இல்ல ஏன்?”

அஜு: " படிக்க நிறைய இருந்தது மாமா, அதும் இல்லாம கொஞ்சம் மனசு அமைதியாக தான் வரலை, இது எனக்கும் வீடு தான். நான் வரமா இருக்க மாட்டேன். "

சசி: " இந்தா இதை எடுத்துக்கோ அஜய்"

அஜு: " அத்தை என்ன இது?"

சசி: " கவி செஞ்சா பால்கோவா, ரொம்ப நல்லா வந்து இருக்கு, உனக்கு தான் ரொம்ப பிடிக்குமா அதான் செஞ்சதும் எடுத்து வெச்சுட்டேன்"

அஜு: " தாங்க்ஸ் அத்தை"

அஜு கிளம்பி வாசல் வரை சென்று திரும்பி பார்த்தான் ரிஷி வாசலிலும், கவி மாடியில் இருக்கும் பால்கனியில் நின்று வழி அனுப்பி வைத்தனர். ரிஷிக்கு தலை அசைத்து விடை பெற்று விட்டு, அவளுக்கு கண்களில் விடை கொடுத்தான்.

கவி பள்ளி படிப்பு இறுதியை நெருங்கி இருந்தது. அவளின் தேர்வு முடிவுகள் நன்றாக வந்தது. அவளுக்கு பிடித்தது போல் உள்துறை வடிவமைப்பு (இன்டீரியர் டிசைன்) படிப்பில் இணைத்து கொண்டாள். அஜு படிப்பின் காரணமாக கோவை வரவே இல்லை. கவி கல்லூரி செல்ல அவளுக்கு வாங்கிய புது அலைபேசி அவர்களை இணைத்தது. அளவாய் தான் பேசுவான். அவனுக்கு படிப்பு மட்டுமே முக்கியம் என்று இருந்து விட்டான். அவன் கண்ணியம் தான், அவர்களின் காதலை மிக இயல்பாக, அழகாக மாற்றியது. கவியும் அதை எல்லாம் புரிந்து கொண்டு அவனுக்கு இணையாக இருந்தாள்.

ரிஷி, உதீப், அஜு அனைவருக்கும் இறுதி ஆண்டு. உதீப் மாறாது இருந்தான். அஜய் இல்லாத இந்த இரண்டு வருடம் ரிஷியும் உதீப்பும் நெருங்கி இருந்தனர். ரிஷி அஜய் உடன் அலைபேசியில் பேசுவதை கூட குறைத்து இருந்தான். இருவரும் வளாக நேர்காணலில் ஒரே இடத்தில் வேலையும் பெற்று இருந்தனர்.

அஜு, யாது, கவின் மூவரும் அதே போல் வளாக நேர்காணல் மூலம் ஒரே இடத்தில் இருந்தனர். ஐடி உலகம் அவர்களை அன்புடன் அழைத்து இருந்தது. இரண்டு வருடம் கழித்து இல்லம் வருகிறான். மொத்தமும் மாறி முழு ஆணாய். நெஞ்சம் முழுக்க அவளை சுமந்து, கவி," உன்னை போல் நானும் ஜிம் போறேன், டயட் இருக்கேன், நீ வரும் போது என்னை உனக்கு அடையாளம் தெரியாது என்று கூறினாள்."

அவளின் அளவுகளை மனதில் ஒரு முறை கொண்டு வந்து பார்த்த அஜய் ‘ உன் அழகு அதான் டி அம்மு’ நினைத்து கொண்டான். தாய் தந்தை இருவரும் வந்து பார்த்து செல்வதால் அவர்களை விட அவளை காண வேண்டும் என்ற ஆவல் தான் அதிகமாய் இருந்தது. விஜி கூட அவளை பற்றி கூறி இருந்தார். அவள் மாறி விட்டாள் என்று, அவள் புகைப்படம் கூட அனுப்பக்கூடாது என்று சொல்லி வைத்து இருந்தான். அவனின் மனம் அலைபாய கூடாது என்று அதே அவனுக்கு எதிரி ஆனது.

கவி மாறி இருந்தாள், உயரம் கூடி, உடல் மெலிந்து, அவள் இடை வளைவு கண்டு அவள் தோழிகள் கூட பொறாமை கொண்டனர். அதே பால் நிறம், குண்டு கன்னம், இன்னும் சிவப்பு ஏறி போன உதடுகள், பருவத்தின் செழுமை அவளின் அழகை இன்னும் அதிகம் செய்து இருந்தது.

அஜு யாருக்கும் சொல்லவில்லை அவன் வரவை, வீடு சேர்ந்து அவன் அம்மாவை ஆனந்த கண்ணீர் சிந்த வைத்து, அப்பாவின் மடியில் தலை சாய்த்து, உண்டு உறங்கி எழுந்து அவளை காண கிளம்பி சென்றான். அவன் வீடு செல்லும் போதே சரண் வந்து பெட்டிகளோடு வீட்டின் முன் இறங்கினான்.

அஜு: " அண்ணா எப்படி இருக்கீங்க?"

சரண்: " நான் நல்லா இருக்கேன், நீ? ஆள் மாறி போய்ட, அம்மா சொன்னாங்க கேம்பஸ் பிளேஸ் ஆகி இருக்கேன்னு, நல்லா பண்ணு டா"

அஜு: " நீங்களும் தான் மாறி போய் இருக்கீங்க, முகம் முழுக்க கல்யாண கலை வேற"

சரண் : " நீயுமா டா, எனக்கு வெக்கம் வராது விடு"

அஜு: " எப்படி எனக்கு தெரியாம இருக்கும்? நீங்க தான் சொல்லவே இல்லையே"

சரண்: " எனக்கே சொல்லல, இதில் உனக்கு நான் எங்க சொல்ல?"

இருவரும் பேசிக்கொண்டே இல்லம் வந்தனர். வீட்டின் உள்ளே ஒரே சிரிப்பு ஒலி, ரிஷியும் புதியவன் ஒருவனும் பேசிக்கொண்டு இருந்தனர்.

சரண்: " மாப்பிள்ளை எப்போ டா வந்த, எங்களை எல்லாம் ஞாபகம் இருக்கா அப்போ?"

ஷ்யாம்: " இல்ல மாமா , இனி நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை, உங்களுக்கு எல்லாமே சிறப்பா செய்யணும் இல்லையா?"

சரண்: " ஓ அப்போ எனக்காக தான் வந்து இருக்க? அப்படி பார்த்தா தெரியலையே" என்று சரண் கண் சிமிட்டி கூற,

ஷ்யாம்: " போதும் மாமா, சரி அவர் யாரு?"

ரிஷி: " என் நண்பன், நமக்கு பக்கத்து வீடு."

பின் அஜய் ரிஷி, ஷ்யாம், சரண் என்று அனைவரிடமும் பேசி விட்டு வீடு திரும்பினான். கவி அலைபேசியில் அழைக்க, அஜய் பேசினான்.

கவி: " எப்போ வருவீங்க ரெண்டு நாளா உங்களை பார்க்க காத்து இருக்கேன்?"

அஜய்: " நாளைக்கு, வந்துருவேன் அம்மு, நீ எங்க இருக்க?"

கவி: " ஸ்டாப் இப்போ தான் இறங்கினேன். நடந்து வீடு போற வரை தான் ஃப்ரீ, வீட்டில் எங்க அத்தை பையன் ஷ்யாம் வந்து இருக்கான், அவன் கூட பேசணும், அவனை பார்த்தும் ரொம்ப நாள் ஆச்சு, அதான் உங்களை கேட்க கூப்பிட்டேன். சீக்கிரம் வாங்க கோவைக்கு"

அஜு: " ஓ அப்போ உன்னை கட்டிக்க போறவர் அவர் தான் இல்லையா?, சரி நீ பாரு கவி ஃப்ரீ ஆயிட்டு சொல்லு பேசலாம்"

கவி:“ஏன் மாமா இப்படி பேசற?”

அஜு: " எங்க அம்மாவையும் பார்க்க போகல நீ, என்கூட பேசவும் நேரம் இருக்காது சொல்ற, என்ன ஒன்னும் இல்ல நமக்குள்ள சொல்ல போறியா?"

கவி: " அத்தை பார்க்கணும் இன்னிக்கி, ரெண்டு நாள் எனக்கு கிளாஸ் ஒர்க் அதிகம்"

அஜு: " நான் லைனில் இருக்கும் போதே போ, நானும் என் அம்மா வாய்ஸ் கேக்கணும்"

கவி: " அப்போ தான் நம்புவா இல்லையா? என் மேல சந்தேகம் இல்லையா? இதோ வந்துட்டேன் உன் வீட்டு வாசலுக்கு அமைதியா இரு நீயே கேளு"

அஜய் வீட்டில் அவன் பெற்றோர் வெளியில் சென்று இருந்தனர். அஜய் எழுந்து அவன் அறை சென்று அமர்ந்து கொண்டான். காவ்யா வீட்டின் உள் வந்து, விஜியை அழைக்க எந்த சத்தமும் இல்லை, மீண்டும் அழைத்து கொண்டே அவள் உள்ளே வரவும் எதுவும் தெரியாதது போல் இவனும் வெளியில் வந்தான். கவி மூச்சு நின்று விடும் போல் இருந்தது, உடலில் ஒரு பரபரப்பு, கண்ணில் காதல் என்று நிலை இன்றி அவன் அருகில் வந்து அவன் கைகளை பற்றி கொண்டாள்.

அவனுக்கு இன்ப அதிர்ச்சி, அவள் மாற்றம் அவனை சிலையாக செய்து இருந்தது, அவள் கை பற்றியதும் அவன் கண்கள் எல்லை மீற, கவி வெக்கத்தில் தலை குனிய அவன் அவள் ஏந்தி பார்த்தான்.

கவி: " ஏன் சொல்லல, பேசாதீங்க போங்க"

அஜய்: " சரி பேசல"

கவி: “என்மேல உனக்கு நம்பிக்கை இல்ல அப்படி தானே?”
jஅஜு அவள் கை பிடித்து அவன் அறை அழைத்து சென்று, அவளை அணைத்து கொண்டான். அவள் உடல் நடுங்க அவனோடு ஒட்டிக்கொண்டாள். அவள் நடுக்கம் குறையும் வரை அணைத்து இருந்தான்.

அஜு: " உன்னை வீட்டுக்கு வர வைக்க பேசினேன் அம்மு, ஆள் அடையாளம் மாறிட்ட டி, எனக்கு இவ்வளவு அழகான பொண்டாட்டியா?, கவின் சொல்ற மாதிரி எனக்கு அதிகமோ?"

கவி அவன் நெஞ்சுக்குள்ள முகம் புதைத்து இருந்தாள். பிரிவு துயர் நீங்க அவனோடு ஒன்றி, கண்ணீர் சிந்த ஆரம்பித்து இருந்தாள். அஜு அவள் முகத்தை மீண்டும் ஏந்தி அவள் நெற்றியில் முத்தம் தந்து,

அஜு: " கொஞ்ச நாள் அம்முகுட்டி, இந்த பிரிவு இன்னும் ரெண்டு அல்லது மூணு வருஷம் சரியா? நான் கொஞ்சமாவது நம்ம வீட்டுக்கு எல்லாம் செய்யணும் இல்லையா? நான் கொஞ்சம் என் சம்பாத்தியத்தில் நின்னுட்டு, அப்பாவை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு, முறை படி உன்னை என் பொண்டாட்டி ஆக்குற வரை காத்து இரு டா, அப்புறம் இந்த பிரிவு எல்லாம் சேர்த்து உன்கூட வாழ்ந்துறேன் சரியா?"

கவி: " சரி மாமா, நான் உனக்காக காத்து இருப்பேன். அடிக்கடி வீட்டுக்கு வா, அத்தையே ரொம்ப கவலையா இருக்காங்க நீ கூட இல்லைன்னு, இனி வேலை சொல்லி ஊருக்கு போனும் தானே? ஆறு மாசம் ஆகும் உன் டிரெய்னிங் முடிய, அதான் சொன்னேன்"

அஜு: " சரிங்க பொண்டாட்டி கிளம்புங்க, நேரம் ஆச்சு இங்க வந்து, தனியா இருக்கோம், அப்புறம் எதாது செஞ்சுடுவேன், நீ அப்புறம் என்னை குறை சொல்ல கூடாது"

கவி அவனை விட்டு விலக, அவன் இடையின் பிடி இறுக,
கவி: “மாமா விடு என்னை, எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான், எதும் செய்யாதே விடு”

அஜு: " விட்டேன், ஒடிரு இல்லை சத்தியாம நான் நல்ல பையான இருக்க மாட்டேன்."

கவி: " நான் வரேன் மாமா"

காதல் வளரும்.