17. முதல் நீ.. முடிவும் நீ

17. முதல் நீ.. முடிவும் நீ
0

கவி அவன் அறை விட்டு வெளியே வந்தாள். அங்கு சரண் முறைத்து கொண்டு நின்று இருந்தான்.

சரண்: " எத்தனை நாளா இது நடக்குது?"

கவி: " அண்ணா… அது… மூணு வருஷமா…"

சரண்: " போ வீட்டுக்கு, நான் இவங்கிட்ட பேசிட்டு வரேன், யாருக்கும் எதும் சொல்லக்கூடாது"

கவி: " அண்ணா காதல் தப்புன்னு சொன்னா அதை நானும் தான் பண்ணிட்டு இருக்கேன், தண்டனை குடுத்தா எனக்கும் சேர்த்து குடு"

சரண்: " நான் ஏன் தண்டனை தரணும்? நான் யாரு உங்களுக்கு?"

அஜு: " அண்ணா என்ன பேசுறீங்க? நீங்க தான் எங்க எல்லாருக்கும் பெரியவர்."

சரண்: " அதன் ரெண்டு பேரும் இதை என்கிட்ட மறைச்சு வெச்சிங்களா?"

அஜு: " மறைக்கணும் நினைக்கவே இல்ல, இப்போ காதலை விட படிப்பு முக்கியம் அதுனால தான் எதுவும் சொல்லவே இல்லை, எனக்கும் காவ்யாக்கும் இது கல்யாண வயசு இல்லையே?"

சரண்: " வீட்டுக்கு போ கவி"

கவி கிளம்பி விட, சரண் அஜுவை கட்டிக் கொண்டான்.

அஜு: " என்மேல கோவம் இல்லையா?"

சரண்: “இன்னும் மூணு வருஷம் நீ சொன்ன அப்போவே வந்துட்டேன், நீ பேசினதை கேட்டேன், பேச்சு வேற மாதிரி போகவும் வீட்டை விட்டு வெளிய போய்ட்டேன். எனக்கு உன்னை எப்பவும் பிடிக்கும் அவ மேல உனக்கு இருக்கற அன்பும் தெரியும். ஆனா…”

அஜு: " என்ன அண்ணா? எதும் பிரச்சனை வரும் சொல்றீங்களா?"

சரண்: " வீட்டுல நீ பார்த்தியே ஷ்யாம் அவனை தான் கவிக்கு பேசி இருக்காங்க, இது பொண்ணு எடுத்து பொண்ணு குடுக்கறதா தான் முடிவு செய்து ஏற்பாடு பண்ண கல்யாணம்"

அஜு: " அதுக்குள்ள நான் இதை வீட்டில் சொல்லிடுறேன் அண்ணா"

சரண்: " இல்ல அஜு, ஷ்யாம் கவி மேல விருப்பமா தான் இருக்கான், அவனுக்கும் எனக்கும் ஒரே நாள் தான் நிச்சயம்"

அஜு: " இல்ல இல்ல, கவியை நான் விட்டு தர மாட்டேன் அண்ணா, இது கவிக்கு தெரியுமா?"

சரண்: " இன்னிக்கு தான் சொல்லணும் இருக்கான் ஷ்யாம்"

அஜு: " நான் பேசுறேன் அண்ணா வீட்டில்"

சரண்: " நான் ஷ்யாம்க்கிட்ட பேசிட்டு சொல்றேன்"

ஷ்யாம்: " எதுக்கு எல்லாம் கேட்டாச்சு மாமா, அஜய் உனக்கு உண்மையா பெரிய மனசு தான், அந்த இம்சை கட்டிக்க ஆசையா இருக்க பாரு, சரி எனக்கு கவி மேல காதல் இல்ல, பெரியவங்க சொன்னாங்க அதான் சரின்னு சொன்னேன். இப்போ உங்க காதலை காப்பத்தனும் இல்லையா? அதுக்காக இப்போ நிச்சயம் தள்ளி போடுறேன், அப்பறம் உங்க வசதிக்கு பண்ணிக்கோங்க சரியா"

அஜு: " ரொம்ப நன்றி ஷ்யாம். கொஞ்சம் நேரம் போய் இருந்த என் உயிரை திருப்பி கொடுத்து இருக்க நீ"

ஷ்யாம்: " நான் எதுவும் செய்யலை, அவ நல்ல பொண்ணு, எதுக்கும் ஆசை கிடையாது. விட்டு குடுத்தே பழகி போன பொண்ணு, அவளுக்காக இதை விட்டு தர மாட்டேனா? அடம் பிடிக்கவே தெரியாது அவளுக்கு எனக்கு இப்போ பயமே மாமா சொன்னா உன்னை கூட விட்டு கொடுத்தாலும் கொடுத்துருவா, அவளுக்கு இது வேணும் வாய் திறந்து கேட்டு பழகமே இல்லை, விரும்பின எல்லா விஷயத்தையும் விட்டு குடுத்து பழகி போய்ட்டா, உன்னை போல அன்பான ஒருத்தனை அவ இழக்க வேண்டாம் அஜய், அவ மேல எனக்கு அக்கறை மட்டும் தான். உனக்கு தான் காதல். அது உன் துடிப்பில் தெரியுது"

சரண்: " ரொம்ப நல்லது அப்போ, எந்த கவலையும் இல்லை"

ஷ்யாம்: " உங்க கல்யாணத்துக்கு தானே? உங்க லைன் க்ளீன் தான் இந்த காரணம் உங்களை ஒன்னும் பண்ணாது"

அஜு: " இதான் விஷயமா அப்போ?"

ஷ்யாம்: " இவங்க காதல் தான் பப்பி காலத்து காதல் அச்சே, எல்லாருக்கும் தெரியும். உனக்கு தான் விஷயம் லேட்டா வருது."

அஜு: " அண்ணா என்கிட்ட இதை சொல்லவே இல்லை"

சரண்: " டேய் விஷயம் இருக்கட்டும், நான் உனக்கு அண்ணன் இல்லை, ஷ்யாம் தான் அண்ணன். நான் உனக்கு மாமா"

அஜு: " சரி ரிஷி எங்க அவன்கிட்ட சொல்லணும் இதை"

ஷ்யாம்: " கதையை கெடுத்த போ, அவன் உன் நண்பனா இருக்கலாம் இப்போ இதை சொல்லாதே எங்க வீட்டில் நான் மாட்டிப்பேன். ரிஷி எங்க அம்மா செல்லம், அப்படியே சொல்லிடுவான். அப்புறம் உன் காதல் காலி"

அஜு: " அவன்கிட்ட எப்படி மறைப்பேன்?"

சரண்: " யார் மறைக்க சொன்னாங்க? தள்ளி போடு, ஷ்யாம் ரிஸ்க் எடுக்கறது உனக்காக தான். நீயும் எடு. "

அஜு: " சரி அண்ணா"

ஷ்யாம்: " மாமா"

அஜு: " அதெல்லாம் உரிமை வந்த அப்புறம் தான்."

சரண்: " சரி நாங்க வரோம் அஜய்"

ஷ்யாம்: " அஜய் இன்னிக்கி ஒரு நாள் நான் காவ்யவை வம்பு இழுத்து விளையாட உதவி செய்வியா? "

அஜு: " சாரி அண்ணா கண்டிப்பா வர மாட்டேன், நீங்க உதவி செய்ய மாட்டேன் சொல்லிட்டாலும் பரவாயில்லை. அவ முகம் வாடி போகும் அதை என்னால பார்க்க முடியாது"

ஷ்யாம்: " ரொம்ப தான், அவளை இன்னிக்கி அழுக வைக்க போறேன் பாரு"

அஜு: " இப்போ தான் உதவி பண்ணிங்க அதுக்குள்ள அவளை அழ வைக்க என்னைக துணைக்கு கூப்பிட்டு இருக்கீங்க, நல்லா இருக்கா இது உங்களுக்கு? அப்போ இம்சைன்னு சொன்னிங்க, எனக்கு இது பிடிக்கல"

ஷ்யாம்: " பாருடா கோவத்தை, சரி போ உனக்காக விடுறேன் போதுமா?"

அஜு: " அவ அழுதா உங்களுக்கு தான் பிரச்சனை"

ஷ்யாம்: " நான் வரேன், விட்டா அடிச்சிருவான் போல"

சரண் அவனை இழுத்து கொண்டு செல்ல, அஜய் இந்த விஷயத்தை யாது, கவின் இருவருக்கும் சொல்ல சென்றான்.

உதீப் இல்லம்

ரிஷி: " என்னடா முக்கியமான விஷயம் வர சொல்லிட்டு இப்போ அமைதியா இருக்க?"

உதீப்: " அது எப்படி இதை சொல்றது ஆரம்பிக்கிறது தெரியலை ரிஷி"

ரிஷி: " சொல்லு டா, நான் உன் நண்பன் அது நினைவு இருக்கட்டும்"

உதீப்: " நான்… நான் கவியை லவ் பண்றேன்"

ரிஷி: " என்னடா சொல்ற? அவ உனக்கு தங்கச்சி மாதிரி, அறிவு இல்ல"

உதீப்: " காதல் மனசு சம்பந்தமான விஷயம், இதுக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு சொல்லு?"

ரிஷி: " கவியும் உன்னை?"

உதீப்: " இல்ல இல்ல, எப்போ இருந்து தெரியல ரிஷி, என் மனசு முழுக்க அவ தான் இருக்கா, சத்தியமா கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துப்பேன் ரிஷி"

ரிஷி: " சரிடா, ஆனா அவளுக்கு என் மாமா பையன் கூட நிச்சயம் ஏற்பாடு ஆகி இருக்கு, அதுனால முடியாது, இது எங்க குடும்ப மானம், மரியாதை அடங்கின விஷயம், அதும் போக என் அண்ணனுக்கு பெண் எடுத்து பெண் குடுத்து இந்த கல்யாணம் என் அண்ணன், தங்கை, என் மாமா பையன், நித்யா அண்ணின்னு நாலு பேரோட வாழ்க்கை இதில் இருக்கு, இது விளையாட்டு இல்லை, இது நடக்க போறதும் இல்லை"

உதீப்: " அப்படி சொல்லாத டா, என்னால கவி இல்லாம வாழ முடியாது, ஏன் காதல் உண்மை. கொஞ்சமாது என்னை யோசி ரிஷி"

ரிஷி: " நான் என் அத்தை பையங்கிட்ட பேசி பாக்குறேன் உனக்காக அவன் விட்டு குடுத்தா, நானே அப்பாக்கிட்ட பேசி இந்த கல்யாணத்தை நடத்தி வெக்குறேன் சரியா?"

உதீப்: " ரொம்ப தாங்க்ஸ் டா"

ரிஷி: " உதீப், என் தங்கச்சி மேல எப்படி காதல்?"

உதீப்: " ஒரு வருஷமா தான் டா இந்த காதல், காலேஜ் போய் ரொம்ப மாறி போய்ட்டா, அதும் அவ அண்ணன் போல இருக்க அஜுவை நான் திட்டினதுக்கு என்ன கோவம் தெரியுமா? இன்னும் என்னை பார்த்தா முகம் திருப்பிட்டு தான் போற, ஆனாலும் அவ மேல எதோ ஈர்ப்பு இப்போ அது காதல் ஆகிடுச்சு"

ரிஷி : “சரி டா நான் கிளம்புறேன்”

உதீப்: " இதில் உனக்கு சம்மதம் தானே?"

ரிஷி: " சம்மதம் தான், என் தங்கச்சி எங்கையும் போக மாட்டா, பக்கத்தில் இருப்பா, நீ என் நண்பன் உன்னையும் எனக்கு நல்லா தெரியும் அப்புறம் என்ன? எனக்கு சம்மதம்"

உதீப் ரிஷியை அணைத்து கொண்டான்.

காதல் வளரும்.