18. முதல் நீ.. முடிவும் நீ

18. முதல் நீ.. முடிவும் நீ
0

கவியின் இல்லம், மாடியில் உள்ள பால்கனி

ரிஷி: “ஷ்யாம் உனக்கு கவி மேல எதும் காதலா?”

ஷ்யாம்: “எதுக்கு கேக்குற?”

ரிஷி: “சரி, நான் ஒன்னு சொல்றேன் பொறுமையா கேளு”

ஷ்யாம்: “சொல்லு”

ரிஷி: “என் ப்ரெண்ட் கவியை காதலிக்கிறான், உனக்கு விருப்பம் இல்லைன்னா…”

‘இவங்கிட்ட சொல்ல வேண்டாம் தானே சொல்லிட்டு வந்தேன்’ என்று திட்டிக் கொண்டே ரிஷி சொல்வதை கேட்டு கொண்டு இருந்தான் ஷ்யாம்.

ஷ்யாம்: " இப்போ நான் என்ன பண்ணனும்?"

ரிஷி: “அது, அவன் என் நண்பன் அவன் சந்தோசமும் முக்கியம், கவி சந்தோசமும் முக்கியம். இப்போ…”

ஷ்யாம்: " இடையில் நான் தான் இம்சையா இருக்கேன் இல்லையா?"

ரிஷி: " அப்படி இல்ல ஷ்யாம் உன் விருப்பம் எனக்கு முக்கியம், அது போக உன் உதவி இல்லாம நிச்சயம் எப்படி நிறுத்துறது?"

ஷ்யாம்: " நான் நிச்சயத்தை தள்ளி போடுறேன், அதுக்குள்ள அத்தை மாமாக்கிட்ட பேசி சம்மதம் வாங்கிக்கோ"

ரிஷி: " தாங்க்ஸ் ஷ்யாம், கவிக்கும் அவனுக்கு பெரிய உதவி பண்ணி இருக்க, நான் போய் அவன்கிட்ட சொல்லிட்டு வரேன்"

ஷ்யாம்: " அஜய் குடுத்து வெச்சவன் தான் டா உன்னை போல நண்பன் கிடைக்க"

ஷ்யாம் அஜய் பெயரை சொல்லும் முன்பே ரிஷி பால்கனி விட்டு சென்று இருந்தான். அவன் நேரே அஜய் இல்லத்தின் உள்ளே நுழைவதை பார்த்து ஷ்யாம் சிரித்து விட்டு, சரணிடம் இதை சொல்ல சென்றான். சரணும் விஷயம் அறிந்து மகிழ்ந்து, கவியிடம் விஷயம் கூறி அவளுக்கு தைரியம் தந்தான்.

ரிஷி அஜு இல்லம் சென்று, அவனை கட்டிகொண்டான்.

ரிஷி: " என் தங்கச்சி என் நண்பனை கட்டிக்க போற, அதும் நானே பண்ணி வைக்க போறேன்"

அஜு: " டேய் என்ன டா உனக்கு…?

ரிஷி: " என் தங்கச்சி என் வீட்டுக்கு பக்கத்திலே வாழ போற, அதும் என் நண்பனை கல்யாணம் பண்ணிக்க போற, நான் செம்ம சந்தோசமா இருக்கேன்"

அஜு: " டேய், இரு இரு நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு"

ரிஷி: “நான் செம்ம சந்தோசத்தில் இருக்கேன் மாப்பிள்ளை, கவிக்கு நான் தேடின கூட இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டான்”

அஜு: " டேய் ஷ்யாம்…"

ரிஷி: " அவன்கிட்ட நான் எல்லாம் பேசிட்டேன் அவனே உதவி பண்றேன் சொல்லிட்டான், நீயும் அமைதியா இரு நான் அப்பா அம்மாகிட்ட பேசுற வரை"

அஜு: " சரிடா, மச்சான் நீ இதில் இவளோ சந்தோசமா இருப்பேன் தெரிஞ்சு இருந்தா நான்…"

ரிஷி: " போதும் விடு, நான் உதீப்புக்கு சொல்லிட்டு வரேன் சரியா?"

அஜு: " சரி டா, அவன் இன்னும் என்மேல கோவமா இருக்கானா? கல்யாணத்துக்கு முன்னாடி சமாதானம் ஆகனும் அவன் கூட"

ரிஷி: " அதெல்லாம் அவனே பேசிருவான் பாரு"

ரிஷி கிளம்பி செல்ல, அஜு சரணை பார்க்க சென்றான்.

சரண்: " வாங்க மாப்பிள்ளை சார்"

அஜு: " சும்மா இருங்க மாமா"

ஷ்யாம்: " பாரு டா உரிமையா?"

அஜு: " ரொம்ப தாங்க்ஸ் எல்லாமே உங்களால் தான்"

ஷ்யாம்: " நீ ஆரம்பிச்சு வெச்சா நான் முடிச்சு வெச்சேன் அவ்ளோ தான்"

சரண்: " எல்லாம் இனி நல்ல படி நடக்கும், பெரியவங்க இனி சரின்னு சொல்லிடுவாங்க நம்ம வீட்டை பார்த்து கண்ணு வைக்க போறாங்க பாரு"

அஜு: " ஆமா மாமா, எல்லாமே கனவு மாதிரி இருக்கு, அப்புறம் நான் ஒரு முறை கவியை பார்க்கணும் பிளீஸ்"

ஷ்யாம்: " போ போ அவ ஹாலில் இருக்கா"

அஜு: " தாங்க்ஸ்"

அஜு உள்ளே சென்று கவியை பார்க்க, கவி அஜுவை கண்டு கண் கலங்கினாள்.

அஜு: " எதுக்கு இப்போ அழர அம்மு, எல்லாம் நல்லதா தான் நடக்கும். இனி எந்த பயமும் இல்லை, எதையும் குழப்பிகாம படி, கல்யாணத்துக்கு அப்புறம் படிக்க நேரம் இருக்காது"

கவி: " போ மாமா"

அஜு: " சரி நான் வரேன்"

அதற்குள் ரிஷி அங்கு சென்று உதீப்பை தூக்கி சுற்றினான்.

ரிஷி: " மாப்பிள்ளை ஷ்யாம் தொல்லை உனக்கு இல்லை, சீக்கிரமே கல்யாணம் தான்"

உதீப்: " டேய் உண்மையா? விளையாட்டு இல்லை தானே?"

ரிஷி அனைத்தும் சொல்ல இப்போது உதீப் ரிஷியை தூக்கி சுற்றினான்.

ரிஷி: " டேய் நான் அஜுக்கிட்ட சொன்னேன் அவனுக்கு எவ்ளோ சந்தோசம் தெரியுமா? உன்னோட சமாதானம் ஆகனும் சொன்னான்"

உதீப்: " என்னோட சமாதானம் ஆகளை அப்புறம் அவன் தங்கச்சி அவன் கூட சண்டை தான். "

இருவரும் சிரித்து பேசிக்கொள்ள, உதீப் வெளிநாடு சுற்றுலா சென்று இருக்கும் அவனது பெற்றோர்க்கு அலைபேசியில் அழைத்து கூறினான். அவர்களும் மகிழ்ந்து விரைவில் வந்து அவனை பார்ப்பதாக கூறினார்.

ரிஷி கிளம்பி வர, வீட்டின் முன்புறம் நின்று அஜு, சரண், ஷ்யாம் என்று அனைவரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

ரிஷி: " அஜு உதீப்க்கு செம்ம சந்தோசம், உன்கூட சமாதானம் ஆகிறேன் சொல்றான். அண்ணா தங்கச்சி பிரிச்ச பாவம் வேண்டாம் சொல்ல சொன்னான்"

அஜு: " எனக்கு அவன் கூட சண்டையே இல்ல அப்புறம் எதுக்கு சமாதானம்?"

சரண்: " டேய் போதும் டா உங்க வேகம், முடியல என்னால"

ரிஷி: " அண்ணா உங்களுக்கு இதில் எதும் வருத்தம் இல்லை தானே?"

சரண்: " இவனை பத்தி எனக்கு தெரியாதா? சத்தமே இல்லாம காதல் ஆகி இருக்கு பாரு"

ஷ்யாம்: " சரி சரி, சரண் மாமா கல்யாணம் வரை, வீட்டில் பேசி சம்மதம் வாங்குற வரை அமைதியா இருங்க எல்லாரும் நான் வேற இதில் இருக்கேன், எந்த சேதாரமும் இல்லாம என்னை என் ஊருக்கு அனுப்பி வெக்கணும் சொல்லிட்டேன்"

ரிஷி: “சரி வாங்க உள்ள போவோம்”

அஜு: " இல்ல நான் வீட்டுக்கு போறேன். யாது, கவின்க்கு சொல்லணும் இதை, அவங்க கேட்டா ரொம்ப சந்தோசப்படுவாங்க"

ரிஷி: " சரிடா பார்க்கலாம்"

அஜு சொன்ன செய்தி கேட்டு இருவருக்கும் மகிழ்ச்சி.

“டேய் என்ன டா நடக்குது இங்க, என்னை கேட்காம எல்லாரும் முடிவு எடுக்குறீங்க? கடைசி வர அவன் இவன் பேசி முடிச்சு வெச்சுட்டீங்க யார் அந்த அவன்? கவியின் கணவன்? - மீ”

பின் நாட்கள் வேகமாய் சென்றது. அஜு டிரெய்னிங் செல்ல கிளம்பி கொண்டு இருந்தான். நாளை கிளம்ப வேண்டும், அவளை பார்த்து பேச இன்று மட்டுமே நேரம்.அவள் கல்லூரி பஸ் ஏறும் இடம் சென்றான்.

காதல் வளரும்.