2. முதல் நீ.. முடிவும் நீ

2. முதல் நீ.. முடிவும் நீ
0

இல்லம் வந்த அஜு, வீட்டில விஜி இல்லை என்று அறிந்து, ஃப்ரெஷ் ஆகி அவனுக்கு அவனே தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு, படித்து கொண்டு இருந்தான்.

அப்போது அங்கு கோவமாக வந்தார் விஜி.

விஜி: " அஜய் எதுக்கு டா கவியை அடிச்சா?"

அஜு: " நான் எங்க அடிச்சேன்? தெரியாம பட்டுச்சு"

விஜி: " அடிச்சதும் இல்லாம கவியை மிரட்டி பந்து வாங்கிட்டு வந்து இருக்க இல்லையா?"

அஜு: " அம்மா, அவ தான் என்னை மிரட்டினா, பந்து தெரியாம தான் பட்டுச்சு, நான் சாரி சொன்னேன், அவ கேட்காம என்னை மிரட்டினா நான் சும்மா வரணுமா?"

விஜி: " வாய்க்கு வாய்க்கு பேசாம இந்த இதை போய் சசி அத்தை வீட்டில் குடுத்துட்டு வா"

அஜு: " தக்காளி தொக்கு எனக்கு? நான் பொடி வெச்சு தான் சாப்பிட்டேன் தெரியுமா?"

விஜி: " செஞ்சு தரேன் உனக்கு, இதை போய் குடுத்துட்டு வா"

அஜு எடுத்து கொண்டு சசி இல்லம் வந்தான். வீட்டின் வெளியே நின்று காலிங் பெல் அழுத்த, சசி கதவை திறக்கும் படி சத்தம் போட்டார். கவி இடுப்பை பிடித்து கொண்டே வந்து கதவை திறக்க அஜு உள்ளே வந்தான்.

கவி: " அம்மா விஜி அத்தை பையன் வந்து இருக்காரு"

அஜு: " இந்தா இதை அம்மா குடுக்க சொன்னாங்க"

கவி: " சாரி, அண்ணா. அப்போ சரியான வலி தாங்கவே முடியல, அதான் அப்படி சத்தம் போட்டு சண்டை கட்டிடேன். என் மேல கோவம்ன்னா என்னை அடிங்க, அண்ணா கூட பேசாம இருக்கதீங்க"

அஜு மனதில், ’ என்ன பொண்ணு இவ, அடிச்சது நான். மன்னிப்பு கேக்க வேண்டியது நான், இவளோ வந்து விட்டு குடுத்து போறா"

அஜு: " ஏய் நான் உன்னை மிரட்டினேன் என்ன அம்மாகிட்ட போட்டு குடுத்து இருக்க உன்னை சும்மா விடனுமா?"

கவி: " அதான் நான் மன்னிப்பு கேட்டேன் தானே?"

அஜு: " சரி, என்னை எங்க எப்போ பார்த்தாலும் சலுட் அடிச்சு அஜய் வாழ்க சொல்லணும் சரியா?"

சசி: " என் பொண்ணு கட்சியிலையா சேர்ந்து இருக்கா? வாழ்க சொல்றதுக்கு"

அஜு: " என்னை எங்க அம்மாகிட்ட போட்டு குடுத்து இருக்க, எனக்கு தான் திட்டு"

சசி: " அவ சொல்லல டா, நான் தான் சொன்னேன். இவ அழுதுட்டே படுத்து இருந்தா, உங்க அம்மா கேக்கவும் நான் தான் சொன்னேன். அவ அண்ணன் வேற அவளை மிரட்டிட்டு போய் இருக்கான். என் பிரென்ட் அஜு கூட சண்டை போட்டா உன் பிரென்ட் யாரும் வீட்டுக்கு வர முடியாது சொல்லி, நீயும் சண்டை புடிக்குற பாவம் டா ரெண்டு பேரும் சமாதானம் ஆகிருங்க"

கவி: " சாரி அண்ணா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்"

அஜு: " சாரி கவி மிரட்டினதுக்கு, அப்புறம் பந்து தெரியாம தான் பட்டுச்சு"

சசி: “இந்தா பால்கோவா உனக்கு பிடிக்கும் விஜி சொன்னா, இரு அஜு சாப்பிட்டு போ”

அஜு: " இல்ல அத்தை நான் சாப்பிட்டேன். டேர்ம் எக்ஸம் வருது நான் நிறைய படிக்கணும். வரேன்."

அஜு வீடு வந்து படிப்பில் மூழ்கி போனான். அடுத்த நாள் காலை ஜிம் சென்று வந்து, குளித்து கிளம்பி பேருந்து நிறுத்தம் வர உடன் உதீப் இணைந்து கொண்டான். இருவரும் பேசிக்கொண்டே நிற்க ரிஷி வந்து சேர்ந்தான். அவனுடன் பேசிவிட்டு உதீப் எதோ சொல்ல அவன் புறம் அஜு திரும்பி நிற்க, அதை பார்த்து கொண்டே வந்த கவி, அஜு முன் வந்து " அஜய் வாழ்க" என்று கூறினாள்.

அஜு கண்கள் விரிய, முதல் நொடி இன்ப அதிர்ச்சி, இரண்டாம் நொடி ஆச்சரியம், மூன்றாம் நொடி அவள் சொல்லிய விதத்தில் வந்த சிரிப்பு என அஜு முகத்தில் உணர்ச்சி கலவை. அவன் வாய் விட்டு சிரிக்க, அனைவரும் சிரித்தனர். ரிஷி மட்டும் முறைத்தான்.

உதீப்: " மச்சி எப்போ டா கட்சி எல்லாம் ஆரம்பிச்சா?"

அஜு: " இல்ல டா, நேத்து என்னை மிரட்டினதுக்கு சொல்ல சொன்னேன் அதான் "

ரிஷி: " லூசு, ரோட்டில் நின்னு என்ன பண்ணிட்டு இருக்க? உன்னை தான் அஜு கூட பேச கூடாது சொல்லி இருக்கேன் இல்லையா?"

கவி: " இல்ல அண்ணா…"

ரிஷி: " உன் பஸ் வந்துருச்சு போ போய் ஏறு"

கவி பஸ் ஏறி சென்று விட,

அஜு: " எதுக்கு டா அவளை திட்டின? உனக்காக என்கிட்ட சாரி எல்லாம் கேட்டு, உன்கூட பேச சொன்னா தெரியுமா?"

ரிஷி: " இல்ல, நேத்து தான். என் ஃப்ரெண்ட் கூட சண்டை போட கூடாது. நீ பேசாத சொல்லி இருந்தேன், சொன்னதை கேட்டு நடக்குறாளா பாரு"

அஜு: " எங்கூட எதுக்கு பேச கூடாது?"

ரிஷி: " அவ சண்டை கட்டுற சொல்லி நீ என்கூட பேசாம போய்ட்டா என்னால தாங்க முடியாது அஜு, நம்ம பழகினது கொஞ்ச நாள் இருக்கலாம் ஆனா என்னால உன்னை யாருக்கு விட்டு தர முடியாது. என் உயிர் நட்பு நீ"

அஜு: " நம்ம ஏன் டா பிரிய போறோம்?"

உதீப்: " அதானே? மூணு பேருக்கும் ஒரே வீதியில் வீடு, ஒரே ஸ்கூல் அப்புறம் எப்படி பிரிவோம்"

அஜு: " எப்பவும் ஒன்னா இருப்போம்"

"சீக்கிரமே பிரியரதுக்குக்கான நாள் வர போகுது - மீ "

காதல் வளரும் :purple_heart: