3. முதலும் நீ.. முடிவும் நீ

3. முதலும் நீ.. முடிவும் நீ
0

மாலை அவன் பள்ளிவிட்டு வரும் போது எதிரில் வந்து கொண்டு இருந்தாள். அவளை பார்த்ததும் இவன் பேச சென்றான்.

அஜு: " காவ்யா எங்க போற?"

கவி: " கோவிலுக்கு"

அஜு: " எங்க சொல்லு, அஜய் வாழ்க"

கவி: “சொல்ல மாட்டேன்”

அஜு: " அப்போ காலையில் எதுக்கு சொன்ன?"

கவி: " நீங்க உதீப் அண்ணா கூட மட்டும் பேசிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சுது அதான் அண்ணா சொன்னேன்"

அஜு: " நான் அப்படி எல்லாம் யாரையும் ஒதுக்கி வைக்க மாட்டேன் எல்லாரும் வேணும் எனக்கு"

கவி: " தாங்க்ஸ் அண்ணா"

அஜு: " ஆனா நான் கேட்கும் போது எல்லாம் அஜய் வாழ்க சொல்லணும் சரியா?"

கவி: " நீங்க எப்பவும் எல்லாரையும் இப்படி தான் மிரட்டுவீங்களா?"

அஜு: " ம்ம் ஆமா, அதும் என்கிட்ட வாய் பேசின உன்னை சும்மா விடுவேனா?"

கவி: " சாரி சொன்னேன் தானே நான் அப்புறம் என்ன?"

அஜு: " நீ யார்க்கிட்டையும் பேச மாட்டேன் சொன்னாங்க? என்கிட்ட மட்டும் வாயாடிட்டு இருக்க அதான்"

இருவரும் பேசி கொண்டு இருக்க அங்கே, விஜியும் சசியும் வந்தனர்.

விஜி: " அஜய் ரோட்டில் நின்னு என்ன பேசிட்டு இருக்க? "

அஜு காலையில் நடந்ததை சொல்லி சிரிக்க,

சசி: " பாருங்க விஜி, கவியை நேத்து இவன் தான் சொல்ல சொன்னான். இப்போ சொல்லி கிண்டல் பண்ணி சிரிச்சுட்டு இருக்கான். இவளும் அஜு சொன்னனு சொல்லி இருக்கா பாருங்க"

விஜி: " அஜு என்ன விளையாட்டு இது சின்ன பொண்ணு கிட்ட போய் வம்பு பண்ணிட்டு இருக்க?"

சசி: " ரிஷி இப்படி தான் பண்ணிட்டு இருப்பான், சரணும் சேர்ந்தா அவ்ளோ தான் சத்தமும் சண்டையும் தான். இப்போ இவனும் சேர்ந்துட்டான் போல, சரி இவனும் அண்ணன் தானே அதான் விளையடுறான் போல"

விஜி: " டேய் கவி அழுக வைக்காதே சொல்லிட்டேன்"

அஜு: " எனக்கு இவ கூட சண்டை கட்ட தான் புடிச்சு இருக்கு, டெய்லி சண்டை தான் அம்மா சாரி"

கவி: " நான் உங்க கூட பேசமாட்டேன்"

விஜி: “வீட்டுக்கு போ, ரோட்ல நின்னு வாய் பேசிட்டு இருக்க, ஒடு போய் படி வந்து கேள்வி கேப்பேன்”

அஜு: " நாளைக்கு லீவ் நான் வீடியோ கேம் விளையாட போறேன்"

டாடா என கூறி அவன் விடை பெற, அவர்களும் சென்று விட்டனர்.

அன்று முதல் எதாவது சொல்லி அவளை சீண்டி கொண்டு இருந்தான். அவளின் தட்டில் உள்ள இனிப்புகளை எடுத்து கொள்வது, அவளின் பேனா, பென்சில் என்று எடுத்து கொண்டு செல்வது, அவளின் புத்தகங்களை ஒளித்து வைப்பது, அவள் மீது பந்து எரிந்து விடுவேன் என்று பயம் கட்டுவது, அவள் படிக்கும் போது டிவி பார்க்கிறேன் என்று சத்தம் அதிகமாக வைப்பது, அவள் டிவி பார்த்தாள் சேனல் மாற்று என்று சண்டை போடுவது, அவளுக்கு பிடித்த பாடல் வந்தால் சேனல் மாற்றுவது, அஜய் வாழ்க, ரிஷி வாழ்க என கூற செய்வது, பல்லி பிடித்து அவள் மீது போடுவேன் என்று பயம் காட்டுவது என்று ரிஷியுடன் சேர்ந்து கொண்டு தினம் புது புது சண்டை, வம்பு தான்.

தினம் விசுவும் கோபியும் பஞ்சாயத்து வைத்து சண்டை தீர்த்து வைத்தாலும் ரிஷியும் அஜுவும் அவளை விடுவதாய் இல்லை. ஆனால் காவ்யா முன் வந்து சமாதானம் ஆகி விடுவாள். அஜுக்கும், ரிஷிக்கும் தண்டனை கொடுத்தால் வேண்டாம் என்று மன்னித்து விடுவாள். அவள் தினம் தினம் அவனுக்கு புதிதாக தெரிந்தாள். அவளின் முகம் சுருங்கி சிணுகுவது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

அவளின் முதல் சந்திப்பு செய்த மாற்றம், இப்போது உரிமையோடு போடும் சண்டை, அவளின் படபடக்கும் கண்கள், தினமும் அவளின் தரிசனம் என்று அஜுவின் வயதுக்கு சரியான வேலை செய்ய, அவனுக்கே அறியாது அவள் அஜய் மனதில் காதல் என்னும் இடத்தை பிடித்து இருந்தாள். அதை அறிய அவனுக்கு சில பல சோதனைகள் தேவைப்பட்டது.

இந்த காதலின் முதல் நிலை விழி தீண்டி கொள்வது தான். அந்த விழி தீண்டலுக்கான நாளும் வந்தது. காவ்யாவின் தாய் வீட்டு சீர் செய்தனர். அவளுக்கு ஏழாம் நாள் தண்ணீர் அது. காலையே சீர் எல்லாம் முடித்து உறவுகள் கூடி மாலை பிரிந்து இருந்தனர். மாலை விஜி எடுத்த சேலையை கட்டிக்கொண்டு இருந்தாள். அவளுக்கு சுற்றி போட்டு விட்டு, விஜி சசியின் வீட்டில் உதவி செய்து கொண்டு இருந்தார்.

அஜய் வீட்டில், படித்து கொண்டு இருந்தான்.

கோபி: “அஜு, போய் அம்மாவை கூப்பிட்டு வா”

அஜு: “அம்மா சசி அத்தை வீட்டுக்கு போய் இருக்காங்க”

கோபி: " சரி டா, போ போய் கூப்பிட்டு வா"

அஜு: " அப்பா அவங்க வீட்டில் காவ்யாக்கு விஷேசம் நான் போக மாட்டேன்"

கோபி: " டேய் உன்னை போய் கூப்பிட்டு வா தானே சொன்னேன்"

அஜு: " நான் போகல"

கோபி: " ரிஷி இருப்பான் தானே? அவன்கிட்ட சொல்லு போ"

அஜு: " இப்போ தான் வந்துட்டு போனான். அப்போவே சொல்லி இருக்கலாம். சரி போய்ட்டு வரேன்"

அஜு கிளம்பி கவி வீடு செல்ல, காவ்யா, ஒரு வாரம் கழித்து அன்று தான் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள். அவன் இரண்டு நாள் முன்பு அவன் தாய்க்கு என்று தேர்வு செய்த சேலை அவள் உடலில், பூ சூடி, அழகாய் சாய்ந்து சோபாவில் அமர்ந்து இருந்தாள். இவன் கேட் திறந்து உள்ளே வர, வாசலில் யாரும் இல்லை, அழைப்பு மணி அடிக்க வந்தவன் உறைந்தான்.

முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே உயிர் வாழுமே

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே

உத்தரவே இன்றி உள்ளே வா,
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்,
அந்த நொடி அன்பே என் ஜீவன் வேறெங்கு போனது பாரடி உன்னில்,
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்,
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்.

வீட்டின் கதவு திறந்து இருந்தது. அவளின் சேலை தரிசனம். அதோடு அவனை கண்ட அவளும் ஒரு நொடி உறைந்து தான் போனாள். முதல் முறை அண்ணன் என்றாலும் அவளுக்குள் கூச்சம். இருவர் விழிகளும் சில நொடி சந்தித்து கொண்டு திசை திரும்பியது.
அவனோ உறைந்தே விட்டான். விஜி சரியாய் சமையல் அறையில் இருந்து வெளியில் வர, அவள் அவளின் அறை செல்ல, அவனும் உள்ளே வர ரிஷியும் சரணும் கேட் தாண்டி உள்ளே வந்தனர்.

விஜி: " வா டா என்னாச்சு முகம் ஒரு மாதிரி இருக்கு"

அஜு: " ஒன்னும் இல்ல அம்மா, அப்பா உங்களை கூப்பிட சொன்னார், அதான் வந்தேன்"

விஜி : " சரி வா போவோம், சசி நான் கிளம்புறேன்."

ரிஷி: " சாப்பிட்டு போ அஜு"

சரண்: " நீ எங்க வீட்டில் தான் இன்னிக்கி சாப்பிடணும்"

அஜு: " படிக்கணும் அண்ணா சாப்பிட்டா தூங்கிடுவேன்"

ரிஷி: " நாளைக்கு படி"

அஜு: " பசியே இல்லை டா பிளீஸ் விடு"

விஜி: " விடுங்க நாளைக்கு வருவான்"

அஜு முன்னே கிளம்பி போக, விஜி பின்னே சென்றார்.

சசி விஜியிடம்,

சசி: " அஜு முகம் சரி இல்ல, என்னன்னு கேளுங்க"

விஜி: " அதே தான் சசி, ஒரு மாறி நடுக்கம் அவன் பேச்சில்"

அஜு வீடு வந்து நேராக குளியல் அறை சென்று உடை களைந்து சவர் திறந்து கீழே நின்றான். அவன் உடலில் இன்னும் நடுக்கம் மனம் அமைதியாக இல்லை. அவளே கண்ணின் உள்ளே நின்றாள்.

’ ஒரு வாரத்தில் இப்படியா மாறி போவா? சின்ன பொண்ணா இருந்தா இப்போ?’

‘நான் சரியா யோசிக்கிறேனா?இல்லை? இது இன கவர்ச்சி அஜய் இப்படி தான் இருக்கும். அவளுக்கு நீ அண்ணா.’

‘இல்லை, நான் அவளுக்கு அண்ணா இல்லை, அவளை அப்படி தங்கையா பார்க்க முடியலை ஏன்?’

‘தப்பு தப்பா யோசிக்காத அஜய், அது புதுசா அவளை பார்த்து இருக்க அதான், இது வெறும் இன கவர்ச்சி அவளை பார்க்காம இருந்தா சரியா போய்டும்.’

கண்ணை மூடி ஒரு நொடி நின்றாலும் அவளின் படபடக்கும் கண்ணும் அவளின் சேலை கட்டிய உருவமும் கண் முன்னே வந்தது.

மனதில் பல விடை புரியாத, விடை தெரியாத பல கேள்விகள். அஜய் குளித்து வந்து உணவு உண்ணாமல் படுத்து அவளை நினைக்காதே, கண் முன்னே நிற்காதே என மனதோடு சண்டை கட்டி ஓய்ந்து தூங்கி விட்டான்.

காதல் வளரும் :purple_heart: