4. முதல் நீ.. முடிவும் நீ

4. முதல் நீ.. முடிவும் நீ
0

அஜய் படிக்கிறான் பிறகு பேசலாம் என்று நினைத்து வந்து அவன் அறை கதவை திறந்த விஜி, அவன் தூங்கி விட்டான் என அறிந்து அமைதியாக சென்று சாப்பிட அமர்ந்தார்.

கோபி: " அஜு எங்க? சாப்பிட கூப்பிடு"

விஜி: " தூங்கிட்டான், அவன் முகமே சரி இல்ல இன்னிக்கி, சசி வீட்டில் பேசும் போது நடுக்கம் குரலில்"

கோபி: " இல்ல என்கிட்ட வாயாடிட்டு தானே வந்தான், ஆனா போ மாட்டேன் சொன்னான் நான் தான் அனுப்பி விட்டேன்"

விஜி: " என்ன சொல்றீங்க?"

கோபி: " இது அவன் வயசு கோளாறு, அப்படி தான் இருக்கும், அவனும் வயசு பையன் தானே அந்த பொண்ணை பார்க்க கூச்சமா இருந்து இருக்கும், அவளை பார்க்க தயக்கம் போல, அவனை இனி அங்க அடிக்கடி கூப்பிட்டு போகாதே சரியா?"

விஜி: " புரியுதுங்க, ஆனா அஜு அவளை தங்கச்சியா தான் பார்க்கிறான்"

கோபி: " சரி தான் ஆனாலும் இந்த வயசு பசங்க வீட்டை விட்டு ஒதுங்கி போற வயசு, அவனை இன்னும் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ சரியா?

விஜி : “சரிங்க”

அஜய் காலை எழுந்து கண் விழிக்கும் போதே, கோபி அருகில் அமர்ந்து இருந்தார். எழுதவன் அவர் மடியில் தலை வைத்து தூங்கினான் மீண்டும், அவர் அவன் தலை வருடி கொண்டே பேசினார்.

கோபி: " ஏன் நேத்து அஜு சாப்பிடாம தூங்கினார்?"

அஜு: " பசி இல்ல அதான்"

கோபி: " நேத்து ஏன் விசு மாமா வீட்டுக்கு போக மாட்டேன் சொன்ன? ஒரு வேளை அங்க போய்ட்டு வந்தது தான் பசி இல்லையா? அதும் இல்லாம அம்மா சொன்னாங்க டா, உன் குரலில் நடுக்கம், முகம் எல்லாம் சரி இல்லன்னு, என்னாச்சு? நேத்து காவ்யாவை பார்த்தியா?"

அஜு: “…”

கோபி: " சொல்லுங்க அஜு நீங்க சொன்னா தானே தெரியும்?"

அஜு: " கூச்சமா இருந்துச்சுப்பா, கவியை பார்க்க நேத்து பயந்தேன், சேலை எல்லாம் கட்டி இருப்பான்னு ஒரு தயக்கம், இதெல்லாம் எனக்கு புதுசுப்பா, நான் போனேன் அவ தான் ஹாலில் இருந்தா, எனக்கு சங்கடமா இருந்துச்சு அங்க நிக்க ஏன்னு தெரியல, உடம்பு நடுங்குச்சு, எதும் யோசிக்க முடியல, வீட்டுக்கு வந்து குளிச்சு படபடப்பு போகவே இல்லை, எதோ யோசனையில் தூங்கிட்டேன்."

கோபி: " அஜு எதுக்கு இவளோ கூச்சம்? தயக்கம்? அவ நம்ம கவி தான். நீயும் வயசுக்கு வந்துட்ட அது உனக்கு தெரியும் தானே?"

அஜு: " அப்பா, அது… தெரியும்"

கோபி: " அதே தான் அஜு காவ்யாக்கு, அவளுக்கும் உனக்குள்ள என்ன என்ன மாறுதல் வந்துச்சோ அதே தான் வரும். உன் உடல் வாகுக்கு எப்படி மாறுச்சோ அதே போல தான் அவள் உடல்வாகுக்கு என்னவோ அவளுக்கும் நடக்கும், சோ அவளும் சக மனுஷி தான். அவளுக்கும் கூச்சம் இருக்கும், நல்ல அண்ணனா தயக்கம் விட்டு பேசு ஆனா இனி முன்ன போட்ட மாதிரி சண்டை எல்லாம் போட கூடாது சரியா?"

அஜு: " சரிப்பா, சண்டை போட மாட்டேன். ஒரே குழப்பமா இருந்தேன் இப்போ தெளிஞ்சு நல்லா இருக்கு, தாங்க்ஸ்ப்பா"

கோபி: “ஒடு போய் கிளம்பு அம்மா பார்த்தா சண்டை தான். மடியில் படுத்து வேற இருக்க கண்டிப்பா சண்டை தான் எழுந்திரு”

அஜு: " இன்னும் கொஞ்ச நேரம் தூக்கம் வருது, அதும் உங்க மடியில் நல்லா இருக்கு"

விஜி: " வரும் வரும் ஸ்கூல் யார் போவாங்க?"

அஜு: " ஸ்பெஷல் கிளாஸ் தான் அம்மா இன்னிக்கி, சோ கட் அடிச்சுட்டேன். எட்டு மணிக்கு கிளாஸ்மா மணி இப்போ எட்டு முப்பது, இனி நான் அங்க போய் என்ன பண்ண போறேன்?"

விஜி: " யாரை கேட்டு கட் அடிச்சா?"

அஜு: " யாரை கேக்கணும்?"

கோபி: " விஜி, விடு அவன் என்ன படிக்காத பையனா? டாப் ரேங்க் ஸ்டூடண்ட் படிச்சுக்குவான். தூங்கட்டும் விடு"

விஜி: " இப்படியே செல்லம் குடுங்க, நாளைக்கு பெரிய பெரிய முடிவு எடுத்துட்டு வந்து நிக்க போறான் அப்போ தெரியும் என் வார்த்தை"

கோபி: " என் பையன் முடிவு எப்பவும் சரியா தான் இருக்கும்"

அஜு: " லவ் யூ அப்பா"

கோபி: " நான் வேலைக்கு போகனும் என்னை விடு"

அஜு திரும்பி படுத்து தூங்க அவன் கண்ணில் அவள் வந்து நின்றாள்.

அஜு சிந்தனையில்

’ அப்போ எனக்கு வந்த அதே மாற்றம் அதெல்லாம் உனக்கும் வருமா?’

அவன் எண்ணம் எங்கு எங்கோ போக எழுந்து அமர்ந்து அவனை சமன் செய்தான்.

’ ச்சா, இவள நினைச்சாலே தூக்கம் போய்டுது, என்ன தான் டி பண்ற என்னை? நேத்து ஏன் அப்படி பார்த்தா? ’

’ இனி தூங்கின மாதிரி தான். எழுந்து புக் உள்ள மண்டையை விடுல அவளையே சுத்தி சுத்தி தான் நினைப்பு இருக்கும் ’

அஜு அடுத்த வந்த நாள்களில் சிறப்பு வகுப்புகள் இருக்க, அவன் படிப்பில் மட்டுமே அவன் கவனத்தை வைத்து இருந்தான். மூன்று மாதமும் படிப்பு என்றே கழிந்தது. சில நேரம் அவள் தரிசனம் கிடைக்கும் அப்போது நிலை இன்றி தடுமாறினான். அவளிடம் புது மாற்றம் அவன் கண்களுக்கு மட்டும் தெரிவது போல இருந்தது. அவளின் முக பரு கூட அவனிடம் சலனம் கொடுத்தது. அதை எல்லாம் தள்ளி வைத்து முயன்று சமன் செய்து படிப்பில் ஒரு முகமாக இருந்தான்.

தேர்வுகள் முடிந்தது. அன்று அவன் வெள்ளை சட்டை ஹோலி கொண்டாடி இருந்தது. இனி அந்த சட்டை கறி துணி பிடிக்க கூட ஆகாது. விஜிக்கு இது கொஞ்சம் கூட பிடிக்காது. அவனை காலையில் பல முறை இதை செய்தே என்று கூறி தான் அனுப்பி இருந்தார். அவனின் கோலம் பார்த்தார் அவனுக்கு கண்டிப்பாக நாலு அடி கூட விழும் என்று அவனுக்கு தெரியும். எனவே அவன் ரிஷியிடம் காலையிலேயே அவனின் மாற்றுடையை கொடுத்து வைத்து இருந்தான்.

சசி விஜி இல்லத்தில் வர இருக்கும் விடுமுறையும், சரண் வந்து இருப்பதாலும் முறுக்கு செய்து கொண்டு இருந்தார். அஜு ரிஷியுடன் அவன் இல்லம் செல்ல சரண் அவன் நண்பர்களை பார்க்க வெளியில் கிளம்பி கொண்டு இருந்தான். இருவரும் சட்டை முழுக்க சாயத்தோடு வீடு வந்து சேர்ந்தனர். ரிஷி, சரண் இருவரும் தங்கும் அறையில் ரிஷியும் அஜுவும் குளித்து உடை மாற்றி கொள்ள உள்ளே சென்றனர். முதலில் அஜு குளித்து உடை மாற்றி கொண்டு இருக்க, ரிஷி குளிக்க சென்றான்.

காவ்யா, பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தாள். சசி அவளை அழைத்து முறுக்கை கொடுத்து வீட்டில் காபி கலந்து அண்ணன்கள் இருவருக்கும் கொடுத்து விட்டு கவியையும் உண்ணும் படி கூறினார். இவளும் இல்லம் வந்து உடை மாற்றி காபி போட்டு, மூன்று கப்பில் ஊற்றி வைத்து கொண்டு அண்ணன்களின் அறையை பார்க்க அது மூடி இருந்தது. பகலில் ரூம் அறை மூட கூடாது என்பது அவர்கள் வீட்டில் எழுத படாதா விதி.

அறை கதவை திறக்க போனவள், தாழ்ப்பாள் மீது கை வைக்க அது அவள் தள்ளும் முன்னே அஜய் உள் இருந்து இழுக்க, நிலை தடுமாறி அவன் நெஞ்சோடு மோதி நின்றாள். அஜய் கதவை ஒரு கையிலும் அவளை ஒரு கையிலும் பிடித்து இருந்தான். அவளின் மோதல் அவனின் பாலுணர்வுகளை தூண்டி இருந்தது. இரு நொடி தான் அவள் அவனை விட்டு விலகி சமையலறை உள் நுழைந்து கொண்டாள். இவன் ஹாலில் அமர்ந்து டிவி போட, அவள் குனிந்த தலை நிமிராமல் வந்து காபி, முறுக்கு என்று அடுக்கினாள்.

கவி: " சாரி அஜு அண்ணா, சரியா கவனிக்காம திறந்துட்டேன்."

அஜு: " விடு கவி"

ரிஷியும் உடை மாற்றி வந்து அமர,

ரிஷி: " எப்போ வந்த கவி, யாரு செஞ்ச முறுக்கு?"

கவி விவரம் சொல்ல, ரிஷி அனைத்து கேட்டு விட்டு, அவளையும் அங்கேயே அமர சொல்ல, அவளும் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு அதன் தெரியாமல் நடந்த நிகழ்வு என்று விட்டு விட்டாள். அவனுக்கோ அவன் பாடு கஷ்டமாக இருந்தது. கண்கள் அவளின் முகத்தில் இருந்து கீழ் இறங்கியது.

அவளின் பால் நிறம், உணர்வு காட்டும் கண்கள், குண்டு கன்னம், சிவந்த உதடு, அதன் அருகில் இருந்த சிறு மச்சம், அவளின் வெண் கழுத்து, எழுந்து நிற்கும் நெஞ்சழகு என்று அவளின் இளமை பூரிப்புகளை அஜய்யின் கண்கள் ரசித்தது. மூன்று மாதம் முன் இவள் இப்படி இல்லையே என்று யோசித்து கொண்டான். முகத்தில் குழந்தைத்தனம் துளைத்து இருந்தாள். முகத்தில் அத்தனை அமைதி. அவளின் முகத்தை கைகளில் ஏந்திட ஆசை வந்தது அவனுக்கு, கன்னம் தொட்டு பார்க்க எண்ணம் வந்தது.

’ நீ என் தங்கச்சி இல்ல கவிகுட்டி, இது இனகவர்ச்சி இல்லைன்னு தோணுது, இது காதல் தான் போல, ஆனா இன்னும் இதை முழுசா உணரவே இல்லை, ஆனா அறிகுறி தெரியுது டி"

அஜு அவனை சமன் செய்ய முடியாது தவித்து கொண்டு இருந்தான். அப்போது அங்கே விஜியும் சசியும் வந்து சேர்ந்தனர்.

  • காதல் வளரும் :purple_heart: