5. முதல் நீ.. முடிவும் நீ

5. முதல் நீ.. முடிவும் நீ
0

விஜி வந்த உடனே பார்த்து முறைத்தது அஜுவை தான்.

விஜி: " சட்டை நாசம் பண்ணி வெச்சு இருக்க அப்படி தானே? அதென்ன சொன்னா கேக்குறது இல்லை?"

அஜு: " அம்மா…"
’ கவியின் முன் திட்டி இருக்க கூடாது அம்மா நீங்க ’

கவி: " அத்தை, இது தான் கடைசி நாள், இனி இப்படி எப்பவும் ஒரு நாள் வர போறது இல்லை, அந்த சட்டையை விட இப்போ சேர்த்து இருக்கற நினைவுகள் பெருசு"

விஜி: " அவன் செஞ்ச தப்புக்கு நீ விளக்கம் சொல்றியா? அதை சட்டை இல்லாத எதாவது பசங்களுக்கு குடுத்து இருக்கலாம், சட்டை புதுசு தெரியுமா?"

கவி: " அப்போ தப்பு தான் அத்தை. பேசாம இந்த மாச பாக்கெட் மனி கட் பண்ணி அதை சரி பண்ணிடுங்க"

விஜி: " ரொம்ப சரி"

அஜு: " அம்மா… இது அநியாயம்"

விஜி: “கவி சொன்னது சரி தான், அப்போ தான் இனி நான் சொன்னா நீ கேட்டு நடந்துப்ப”

அஜு: " என்ன கவி இப்படி பண்ணிட்ட, போ டி, என்கூட பேசாத"

கவி: " ஏன் நான் பேச கூடாது? நான் தப்பா என்ன சொன்னேன்? அம்மா சொன்னதை நீங்க கேக்கல தானே? அதுக்கு தண்டனை இது, இதில் என் தப்பு என்ன? நான் உங்களுக்கு தான் சப்போட் பண்ணேன் முதலில், இப்போ அத்தை சொல்றதும் சரி தானே? இதில் என் தப்பு இருந்தா சாரி அஜு அண்ணா"

அவள் பேசிய விதமே அவனுக்கு மிக பிடித்து இருந்தது, அதுவும் அவன் பெயரை சுருக்கி அவள் கூரியது அவனை உற்சாகம் கொள்ள செய்தது.

அஜு: " சரிம்மா எடுத்துக்கோங்க, இந்த மாசம் எனக்கு குடுங்க, அடுத்த மாசம் தரவே வேண்டாம். எனக்கு செலவு இருக்கு"

விஜி: " என்ன செலவு?"

அஜு: " அது சப்ரைஸ் சொல்ல முடியாது"

விஜி: " என்னவோ பண்ணு"

அடுத்த வந்த ஒரு வாரத்தில் அஜு விஜியிடம் பணம் வாங்கி கிரிக்கெட் பேட் வாங்கி இருந்தான். நாளை ரிஷியின் பிறந்த நாள். கிஃப்ட் தர அதை அவன் கண் படாமல் ஒளித்து வைத்து விட்டு வந்தான். அப்போது கவி அவன் வீட்டின் உள் வந்து கொண்டு இருந்தாள். முதல் முறை அவன் வீட்டின் உள்ளே வந்தாள் அவள். அவளின் பிங்க் சுடிதார் அவளை அவன் கண்ணுக்கு தேவதை ஆக்கி காட்டியது. அவள் உள்ளே வரவும் விஜி அவளை வரவேற்று உள்ளே அமர சொன்னார். அவள் அமரும் போதே, உதீபும் சரணும் வந்து சேர்ந்தனர்.

அஜு: " எல்லாரும் ஒன்னா வந்து இருக்கீங்க என்ன விஷயம்?"

சரண்: “ரிஷி பிறந்த நாள் சப்ரைஸ் தர பிளான் போட போறோம், அவன் கடைக்கு போய்ட்டு வர வரை தான் நேரம், சோ சீக்கிரம்”

உதீப்: " நைட் பன்னிரெண்டு மணிக்கு வரணும், கேக் கட்டிங் இது தானே?"

கவி: " அண்ணா இதெல்லாம் ஒரு பிளான் சொல்லாதீங்க"

அஜு: " அப்போ நீங்க சொல்லுங்க காவ்யா மேடம் சப்ரைஸ் என்னன்னு?"

கவி: " யாரும் நாளைக்கு ராத்திரி 11.45 வரை அவனுக்கு பிறந்த நாள் காட்டிக்க கூடாது அவனே சொன்னாலும் அப்படியா கேட்டு விட்டுரணும்"

விஜி: " இது வேண்டாம் கவி"

கவி: " இல்ல அத்தை எல்லாரும் மறந்துட்டாங்க நினைச்சு அவன் சோகமா இருக்கும் போது அவனுக்கு சப்ரைஸ் தரணும், பாருங்க ரிஷி அப்படியே ஷாக் ஆகி நிக்க போறான். அதும் எல்லாரும் கேக், ஸ்வீட், கிஃப்ட் குடுத்து அவனை பேச விட கூடாது. எதும் இல்லைன்னு நினைக்கும் போது எல்லாமே இருக்கு தெரிஞ்சா அந்த சந்தோசம் வேற"

சரண்: " அச்சோ அரிசி மூட்டைக்கு இவளோ அறிவா?"

கவி: " நான் போறேன் போ"

அஜு: " உண்மையா செம்ம பிளான் கவி"

உதீப்: " தெரியாத மாதிரி நடிச்சா அவன் கோவப்படுவான் கவி, நான் மாட்டேன்"

கவி: " பிளீஸ் அண்ணா பிளீஸ் நீங்க பிளான் சொதப்பதீங்க"

உதீப்: " சரி கவி உனக்காக"

அனைவரும் திட்டம் போல அடுத்த நாள் எதுவும் தெரியாதது போல இருந்தனர். அன்று முழுவதும் யாரும் ரிஷியை கண்டு கொள்ளவே இல்லை. அவனுக்கு அழுகை வரும் போல இருந்தது. அதுவும் அஜு எதேனும் சொல்வான் என்று ஆவலாக அவன் வீடு சென்று பார்க்க, அவனோ உறங்கி கொண்டு இருந்தான். மாலை அவனே விசுவிடம் கேட்டும், அவர் மறந்து விட்டதாக கூறி அடுத்த முறை பார்ப்போம் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

இரவு 11.30 அஜய் பூனை போல் வீட்டின் உள்ளே வந்தான். பின்னே உதீப், அவனின் தம்பி உமேஷ் என்று வர கோபி, விஜி, சசி, கவி, விசு, அஜு, உதீப், உமேஷ் அனைவரும் ரிஷியின் அறை கதவை திறந்து உள்ளே சென்றனர். சரண் விளக்கை போட்டு விட, ரிஷி திரும்பி படுத்து கொண்டான்.

அஜு ரிஷி அருகில் சென்று,

அஜு: " ரிஷி எழுந்தரி இன்னும் என்ன தூக்கம்?"

ரிஷி: " அஜு இப்போவேவா? மணி என்ன டா?"

அவன் அரை தூக்கத்தில் எழுந்து அமர, அவன் முன் கவி கேக் வைக்க, ரிஷி கண்ணை நன்றாக திறக்க, அனைவரும் பிறந்த நாள் பாட்டு பாட ரிஷி கையில் கத்தியை கொடுத்தாள் காவ்யா. அவன் புரிந்து இன்பமாய் அதிர்ந்து கேக் கட் செய்தான். பின் அனைவரும் அவன் மீது கேக் பூச அவனும் திருப்பி பூசி விட்டான்.

பின் அனைவரும் பரிசு கொடுக்க விசுவும் சசியும் அவனுக்கு புது பணப்பையும் அதில் சில ஆயிரம் வைத்து கொடுத்தனர். சரண் அவனுக்கு புது ஷுக்களை வாங்கி வந்து இருந்தான். உதீபும் உமேஷும் பிளே ஸ்டேஷன் கொடுத்தனர், விஜியும் கோபியும் அவனுக்கு புது துணி எடுத்து கொடுத்து இருந்தனர். கவி அவனுக்கு புது கைக்கடிகாரம் கொடுத்தாள். அனைவரின் பரிசும் பார்த்து விட்டு அஜு தயங்கி தயங்கி அவன் பரிசை தர, ரிஷி அவனை கட்டி கொண்டான். அஜு அழுதே விட்டான்.

ரிஷி: " ஏத்தனை நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா, அப்பா வாங்கியே தரமாட்டேன் சொல்லி இருந்தாரு, நான் படிக்க மாட்டேன், கிரிக்கெட் மேல பைத்தியம் ஆகிடுவேனு இப்போ நான் செம்ம ஹேப்பி"

அஜு: " இது போதும் டா"

பின் அனைவரிடமும் ரிஷி சண்டை பிடிக்க, கவியை அனைவரும் கை காட்ட, அவளின் தலையில் கொட்டினான். பின் அவளுக்கு கை பிடித்து நன்றி கூறினான். பின் விசு, சசியிடம் விடை பெற்று கொண்டு கோபியும் விஜியும் கிளம்ப, அஜய் ரிஷியுடன் இருக்கிறேன் என்று கூறி விட்டான். உமேஷ் உதிப் இருவரும் அவர்களது இல்லம் செல்ல, பின் அனைவரும் அவரவர் அறை செல்ல, அஜு ரிஷியை கட்டி கொண்டான்.

அஜு: " உனக்கு என் பரிசு புடிக்கும் எண்ணமே அவங்க பரிசை எல்லாம் பார்த்து போய்டுச்சு, நீ சிரிச்சதும் தான் உயிரே வந்தது"

ரிஷி: " டேய் உண்மையா நல்ல பரிசு இது, அதும் கிரிக்கெட் உயிர் எனக்கு, என்னை புரிஞ்சு பரிசு கொடுத்தது நீ தான், மற்ற எல்லாரும் கொடுத்த பரிசு என்கிட்ட ஏற்கனவே இருக்கு, இது தான் இல்லாதது."

இருவரும் பேசிக்கொண்டே தூங்கி விட்டனர். இன்று நட்பு பெருக்கிய இதே பேட் தான் இவர்கள் நட்பு முடியும் போதும் உடன் இருக்கும். அப்போது முடிய போகும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று.

அடுத்த வந்த மாதத்தில் காவ்யா அவளின் பாட்டி வீட்டுக்கு சென்று விட்டாள். அஜய், ரிஷி அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்து இருந்தனர். அவர்களின் தேர்வு முடிவும் நன்றாக வந்து இருந்தது. அஜய், உதீப், ரிஷி மூவரும் பிரியும் நேரமும் வந்தது. அஜய் சென்னை சென்றான். உதீப், ரிஷி இருவரும் கோவையில் சேர்ந்தனர். அஜய் கணினி பொறியியல் சேர, உதீப் மற்றும் ரிஷி இயந்திர பொறியியல் சேர்ந்து இருந்தனர். இங்கே தான் இனி அவர்களின் விதியில் பெரும் விளையாட்டு ஆரம்பம்.

காதல் வளரும் :purple_heart: