6. முதல் நீ..முடிவும் நீ

6. முதல் நீ..முடிவும் நீ
0

அஜய் தனியாய் சென்னை சென்று விட, உதீபும் ரிஷியும் நெருங்கிய நண்பர்கள் ஆகி இருந்தனர். பல வருட நண்பனை ரிஷிக்கு கொடுத்து சென்று இருந்தான் அஜய். ஆனால் அவனுக்கு திருப்பி தர போவது எல்லாம் துரோகம் தான். நண்பன் எதிரி ஆனால் கூட சேர வாய்ப்புண்டு, துரோகி ஆனால்?

அஜய் இல்லாத போது அவனின் தாய், தந்தை உடன் காவ்யா நெருங்கி இருந்தாள். வீடு தாண்ட அவளுக்கு செல்ல அனுமதி இருந்த இரண்டே இடம் கோவிலும், அஜய் வீடும் தான். அஜய் படிப்பில் முதலில் தடுமாற அவன் கோவை வருவதை தவிர்த்து விட்டு படிப்பில் மூழ்கி இருந்தான், எவருக்கு எப்படியோ இந்த படிப்பு அவனுக்கு முக்கியம், அவனின் குடும்ப சூழ்நிலை அது தான் அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை. உதீப், ரிஷி போல இவன் ஹை கிளாஸ் வாழ்க்கை இல்லை. நண்பனுக்கு புது பேட் வாங்க அவனின் சேமிப்பு, பாக்கெட் மனி எல்லாம் போட்டு தானே வாங்கி கொடுத்தான்? அவனுக்கு படிப்பின் அருமை தெரியுமே, தாயும் தந்தையும் சொல்லி சொல்லி தானே வளர்த்து இருந்தனர்.

இங்கு ரிஷியும், உதீபும் பணக்கார பிள்ளைகளோடு நட்பு பாராட்டி அவர்களோடு மட்டுமே சுற்றி திரிந்து, தேவை இல்லாத பழக்கத்தை பழகி கொண்டனர். அஜய் அம்மா கையில் சாப்பிட வேண்டும் என்று ஆசை வரும், அதை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு, அவன் ஹாஸ்டல் உணவை உண்ண முடியாது உண்டு, படிப்பில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தான். அங்கு ரிஷியும் உதீபும் படித்தார்கள் தான். ஆனால் முன்பு இருந்தது போல் இல்லை.

அஜய் வாரம் ஒரு முறை அழைப்பான் இருவருக்கும், பின் தினமும் தாய் தந்தையிடம் பேசி விட்டு தான் தூங்குவான். அவன் படிப்பில் நன்றாக நிற்க முதல் செம் தேர்வு வரை நேரம் தேவைப்பட்டது. அதற்குள் அவனுக்கு அங்கு இரண்டு புதிய நண்பர்கள் கிடைத்து இருந்தனர். ஒருவன் கவின் சென்னை வாசி, மற்றொருவன் யாதுநந்தன். மூவரும் ஹாஸ்டலில் ஒரே அறை தான். அஜய் ஆறு மாதத்தில் நெருங்கி பழகி இருந்தான். யாது, கவின், அஜய் மூவருக்கும் ஒரே மாதிரியான குடும்ப சூழல்.

கவின் சென்னை வாசி. அம்மா அப்பா இருவரும் வேலைக்கு சென்று இருவரையும் வளர்த்தனர். அவனின் தங்கையும் சென்னையில் 11 ஆம் வகுப்பு தான் படித்து கொண்டு இருந்தாள். பெயர் பிரீத்தி.

யாது நந்தன் அஜய் போல வீட்டிற்க்கு ஒரே பையன் தான். சொந்த ஊர் திருச்சி. இப்போ நம்ம கதைக்கு இவங்க தான் தேவை சோ இப்போ இவளோ தகவல் போதும்.

அஜய் கல்லூரியில் அவன் தேர்வு முடித்து விட்டு வர கவின் அறை விட்டு வெளியே வந்தான். யாது இன்னும் எழுதி கொண்டு இருக்க, அருகில் இருந்த மரத்தின் அடியில் உள்ள பெஞ்சில் அமர்ந்தனர். தேர்வை பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது அங்கு ஒரு பெண் வந்தாள். இருவரும் தலை நிமிர்ந்து அவளை கேள்வியாக பார்க்க, அவளோ அஜய்யின் மீது கவனம் வைத்து இருந்தாள்.

கவின்: " என்ன வேணும்? ஏன் பேசாம நின்னுட்டு இருக்கீங்க?"

பெண்: " அஜய் கூட தனியா பேசணும்"

அஜய்யும் கவினும் ஒருவரை ஒருவர் பார்க்க,

அஜய்: " சொல்லுங்க எங்க நட்பில் எந்த ஒளிவு மறைவும் இல்லை"

பெண்: " அது, அது வந்து…"

யாது: " அதான் வந்துருச்சு தானே சொல்லுங்க"

பெண்: " நான் உங்களை நேசிக்கிறேன், ரொம்ப புடிச்சு இருக்கு, உங்க விருப்பம் என்னவோ அதை பொறுமையா சொல்லுங்க, அவசரம் இல்லை"

யாது அஜய்யை பார்க்க, அஜய் முன் வந்து அவளை நேராய் கண் பார்த்தான்.

அஜய்: " நான் ஆல்ரெடி ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்கேன், சாரி. நீங்க தைரியாம சொல்லிட்டீங்க, நான் இன்னும் சொல்லவே இல்லை."

பெண்: " உண்மையவா?"

அஜய்: " உண்மையா அவ பேரு காவ்யா, பிளஸ் ஒன் படிச்சுட்டு இருக்கா, அவ காலேஜ் போனதும் சொல்லுவோம் இருக்கேன்"

பெண்: " அவ லக்கி, ஆல் தி பெஸ்ட், அவங்க வேண்டாம் சொன்னா என்னை ஏத்துபீங்களா?"

அஜய்: " அவளை நான் விட மாட்டேன், அவளும் என்னை ஏத்துப்பா, சோ சாரி".

அந்த பெண் மௌனமாய் திரும்பி செல்ல, அஜய் திரும்பி பார்க்க, யாது முகத்தில் அதிர்ச்சி, கவின் முகத்தில் கோவம். அஜய் தலை குனிந்து நிற்க,

கவின்: " டேய் சொல்லவே இல்ல ஏன்? ஒரு நாள் கூட அந்த பொண்ணை பத்தி நீ பேசினதே இல்லையே?"

அஜு: " அது அவ குட்டி பொண்ணு எனக்கே இப்போ தான் அவளை நான் லவ் பண்றேன் தோணுது. இன்னும் நான் இதில் ஸ்ட்ராங் ஆகல அதான் சொல்லல, அவளை இப்போ லீவ் போய் பார்க்க போறேன். ஆறு மாசம் ஆச்சு எப்படி இருக்களோ தெரியல"

கவின்: " ஓ ஏக்கமா?"

இருவரும் பேசி கொண்டே யாதுவை பார்க்க, அவனும் இன்னும் அதிர்ச்சியில் தான் இருந்தான்.

அஜு: " என்னாச்சு டா?"

யாது: " நீ தப்பான பையன் அஜு, படிக்கிற வயசில் இதெல்லாம் தப்பு உனக்கு தெரியாதா?"

அஜு: " யாது என்ன டா சொல்ற?"

யாது: " லவ் பண்ணதே நான் உன் கூட பேசமாட்டேன்"

கவின்: " இன்னும் இவன் வளரவே இல்ல டா"

யாது: " படிப்பு முக்கியம் இப்போ, நம்ம வீட்டு நிலைமை தெரியும் தானே? நீ தேவை இல்லாம இதெல்லாம் செய்யாத, எனக்கு பிடிக்காது"

அஜு: " யாது அப்படி எல்லாம் இல்ல டா, நான் அவளை காதல் பண்றேன் தெரியவே ஆறு மாசம் ஆச்சு, அவளை பிரிஞ்சு இருந்த இந்த நாட்கள் எல்லாம் தான் என் காதலை புரிய வெச்சது. என் நிலை எனக்கு தெரியும் யாது, அம்மாக்கு காதல் எல்லாம் பிடிக்காது. நான் சம்பாதிச்சு, அம்மா அப்பா ரெண்டு பேர்க்கிட்டயும் சொல்லி சம்மதம் வாங்கி தான் எங்க கல்யாணம் எல்லாம்"

யாது: " படிக்கர பொண்ணை படிக்க விடு, உன் சுய உணர்வுகளுக்கு அவளை உபயோக படுத்திறாதா சரியா?"

கவின்: " டேய் லூசு"

அஜு: " ச்சே, நான் தப்பான பையன் இல்லடா யாது, அவளை ரசிச்சு இருக்கேன் குழந்தை மாறி இருப்பா, ஆனா ஒரு நாளும் தப்பா பார்த்தது இல்லை"

யாது: " இது போதும், படிப்பில் கவனமா இரு"

கவின்: " காவ்யா ஃபோட்டோ காமிடா"

அஜு: " மொபைல இருக்கு வாங்க காட்டுறேன்"

மூவரும் அவர்கள் அறை செல்ல, அஜு மொபைல் எடுக்க, கவின் ஆர்வமாய் அருகில் வந்தான். அவன் காவ்யா, விஜி, சசி உடன் கிளம்பு போது எடுத்த செல்ஃபி அது, காவ்யாவை நன்கு ஃபோகஸ் செய்து எடுத்து இருந்தான்.

காதல் வளரும் :purple_heart: