7. முதல் நீ.. முடிவும் நீ

7. முதல் நீ.. முடிவும் நீ
0

கவின் ஆவலாக வாங்கி அவளின் முகம் பார்த்து விட்டு,

கவின்: " இந்த ஊப்பி போன பூரி தான் உன் காவ்யா வா? நான் ரொம்ப ஆர்வமா பார்த்தேன் போ டா"

கவின் சொல்லி முடிக்க, அஜு அவன் முதுகில் அடித்து இருந்தான்.

அஜு: " கவி குட்டிய கிண்டல் பண்ணாதே சொல்லிட்டேன்"

கவின்: " இது கவிகுட்டி இல்ல டா, கரடி குட்டி என்ன வெள்ளையா இருக்கா அதுனால பனி கரடி சொல்லிப்போம்"

அஜு மொத்த கோவத்தையும் சேர்த்து அவனை அடிக்க யாது வந்து பிரித்து விட்டான்.

யாது: " இதுக்கு தான் சொன்னேன் இந்த காதல் எல்லாம் வேண்டாம்ன்னு யார் கேக்குற?"

அஜு: " அவன் கவிகுட்டியை கிண்டல் பண்றான் டா"

கவின்: " டேய் கவி குட்டி சொல்லாத எனக்கு எரிச்சலா வருது"

அஜு: " வேண்டாம் கவின், அப்புறம் சண்டை தான் சொல்லிட்டேன்"

கவின்: " நீயே பாருடா யாது, நீ பார்த்து சொல்லு"

அஜு அலைபேசி தர யாது காவ்யாவின் புகைப்படம் பார்த்து சிரித்தான்.

கவின்: " நான் சொல்லலை? பார்க்க கரடி குட்டி மாதிரி தானே இருக்கா?"

அஜு: " டேய்…"

யாது: " டேய் என் தங்கை மாறியே இருக்கா டா கவி"

அஜு: " என்ன டா சொல்ற?"

யாது: " எனக்கும் கூட ஒரு தங்கை பிறந்த டா, அவ சின்ன வயசில் தவறிட்டா, அப்புறம் நான் மட்டும் தான், இதோ காவ்யா போல குண்டு கன்னம் என் தங்கைக்கு, அதான் சொன்னேன். கொஞ்சம் பூசின உடம்பு தான் ஆனா அழகா இருக்கா, எனக்கு என் தங்கச்சி கிடைச்சுட்டா டா அஜய் தாங்க்ஸ் டா"

அஜு அவனை கட்டி கொள்ள, கவின் முழித்து கொண்டு இருந்தான். யாது அவனை விட்டு விலகி, கவினை பார்த்து,

யாது: " என் தங்கச்சியா இனி எதும் சொன்ன, உன்னை சும்மா விட மாட்டேன் பார்த்துக்கோ, ஏன்டா பிரீத்தியை இப்படி சொல்லி இருப்பியா? கவியை போய் கிண்டல் பண்ற?"

கவின்: " டேய் அஜய்யை வம்பு இழுக்க சொன்னேன் டா, பொண்ணு அழகா தான் இருக்கா, இவனுக்கு ஓவர் தான். அப்புறம் எனக்கும் அவ தங்கச்சி தான். நான் பிரீத்தியை தினம் அழுக வெப்பேன், அவ கூட சண்டை போட வம்பு செய்ய ரொம்ப பிடிக்கும் எனக்கு, அதே தான் எனக்கு கவி கூடவும்."

அஜு: " அவ சண்டையே போட மாட்டா, விட்டு குடுத்துட்டு போய்ட்டே இருப்பா, நீ கத்தினது எல்லாம் வேஸ்ட் தோணும்"

பின் நண்பர்கள் அனைவரும் அடுத்த நாள் காலை அவரவர் ஊருக்கு கிளம்பினர். அஜய் வர நள்ளிரவு ஆகி இருந்தது. வந்தவன் அசதியில் நேரே சென்று அவன் அறையில் விழுந்து விட்டான். சசி வந்து அவன் உறங்குவதை பார்த்தும், அவன் உடல் மெலிந்து இருந்ததை பார்த்தும் அழுது விட்டார். பின் கோபி சமாதானம் சொல்ல, அவர்களும் சென்று உறங்கினர்.

காலை அஜய் கண் விழித்ததே வீட்டின் உள்ளே பரவிய சமையல் வாசனையில் தான். அவன் எழும் பொழுது மணி பன்னிரெண்டு. எழுந்தவன் நேராய் வந்தது சமையல் அறைக்கு தான். கண்ணை தேய்த்துக் கொண்டே வந்தவன் கண்டது தன் தாயையும் அவர் உடன் உதவி செய்யும் கவியையும். கொஞ்சம் இளைத்து இருந்தாள், அடர் நீலமும், பிங்க் கலந்து ஒரு சுடிதார் அணிந்து, மேலே ஷால் இல்லாமல், தலை குளித்து துண்டு கட்டி நின்று கொண்டு இருந்தாள். நள்ளி எலும்பு குழம்பு, ரசம், சாதம், முட்டை என்று தயார் ஆகி இருக்க, மட்டன் வறுவல் வைக்க வேலை செய்து கொண்டு இருந்தாள் கவி.

அஜு: " அம்மா, உங்க சமையல் வாசனை எழுப்பி விட்டுருச்சி"

விஜி: " போ போய் குளிச்சுட்டு வா, வந்து நல்லா சாப்பிடு, மெலிஞ்சு போய் இருக்க,"

அஜு: " ஹாஸ்டல் சாப்பாடு அப்படி, நல்லா தான் இருக்கும் ஆனா ஒரே மெனு"

இருவரும் பேசி கொண்டு இருந்தனர், அவனை கவி திரும்பி பார்க்கவே இல்லை, இவனும் சில நொடி நின்று பார்த்து விட்டு, குளிக்க சென்று விட்டான். அவன் குளித்து உணவு அருந்த வர, அவளின் சுவடு தெரியவில்லை. விஜி அவனுக்கு பரிமாறி கொண்டு இருந்தார். அவனுக்கு அவளின் முகம் பார்க்காத சோகம் நெஞ்சில் பரவ, சாப்பாடு உள்ளே செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க, தட்டை பார்த்துக்கொண்டே அமர்ந்து இருந்தான்.

கவி: " அத்தை அஜு அண்ணா சரியா சாப்பிடல, நீங்க அவருக்கு வேற எதும் செஞ்சு இருக்கலாம் சொல்றீங்க"

என்று பேசிக்கொண்டே வந்து அவள் வறுவலை வைக்க, அவளை மிக அருகில் கண்ட அஜு முகத்தில் ஒரு வெளிச்சம்

கவி: " நீங்க சாப்பிட்டு சொல்லுங்க அண்ணா, வறுவல் எப்படி இருக்கு?"

அஜு: " இவளோ நேரம் என் முகம் பார்க்காத யார் சமையலும் எனக்கு வேணாம்"

கவி: " அச்சோ சாரி அண்ணா, நான் சமையலில் கவனமா இருந்தேன் முதல் முறை செய்றேன் அதான் பயம். பிளீஸ் சாப்பிட்டு சொல்லுங்க"

அதற்குள் கோபி வர, அனைவரும் உண்ண அமர்ந்தனர். கவி சகஜமாய் உண்ண அமர்ந்தது அவனுக்கு ஆச்சரியம் தான். எங்கும் செல்லாத கவி தன் வீட்டில், தன் தாயுடன் உரிமையோடு வலம் வருவது அவனுக்கு மிக பிடித்து இருந்தது. மனதில் ஏனோ அத்தனை மகிழ்ச்சி, வருங்காலத்தில் இதே போல ஒரு நாள் என் மனைவியாய் அவள் இன்னும் உரிமையோடு காதலோடு இருப்பாள் என்று நினைத்து பூரித்து கொண்டான்.

"பாவம் அவன் வாழ்வில் அப்படி ஒரு நாள் வரபோவதே இல்லை என்று அவனிடம் யார் சொல்வார்களோ? வேண்டாம் இப்போது நிம்மதியாய் இருந்து விட்டு போகட்டும் பிறகு பார்ப்போம்.- மீ "

அவளின் முதல் சமையல் நன்றாகவே இருந்தது, விஜியுடன் சேர்ந்து கற்று இருக்கிறாள். தாயும் காதலியும் சேர்ந்து செய்த சமையல் மனமும் வயிறும் நன்றாக நிறைந்தது. கவி மிக இயல்பாய் உணவு அருந்தி, எழுந்து அனைவரின் தட்டையும் கழுவி வைத்து என்று அனைத்தும் செய்தாள். இத்தனை இயல்பாய் அவள் தன் வீட்டு பழக்க வழக்கத்திற்கு இணைந்து கொண்டது வேறு ஆச்சரியம் அவனுக்கு, விஜிக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும். அஜய் செய்தாலே சில நேரம் கடிந்து கொள்ளும் அவன் தாய் கவியை ஒரு வார்த்தை கூட கடிந்து பேசவில்லையே? பின் ஆச்சரியம் இருக்காதா? அவள் வேலை முடித்து வரவும், சசி வந்து அவளை அழைக்கவும் அவளின் பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு சென்றாள்.

அஜய்: " என்னம்மா, அவ பையெல்லாம் எடுத்துட்டு போற? "

விஜி: " நம்ம வீட்டில் தான் இருந்தா நாலு நாள். உன் அறையில் தான் இருந்தா, நீ நேத்து வரேன் சொல்லி என்னோட இருந்துட்டா, சசி அத்தை வீட்டில் எல்லாரும் வெளியில் போய்ட்டு வந்தாங்க, இவளுக்கு டெர்ம் எக்ஸம் அதான் இங்கேயே விட்டு போங்க சொன்னேன். தனியா அவ வீட்டில் எப்படி விட முடியும்? நீயும் வீட்டில் இல்லை தானே அதான் இங்கேயே இருக்கட்டும் சொல்லிட்டேன்"

அஜு மனம் எல்லாம் குதிக்க அவன் அறை சென்றான். அவளின் வசம் நிறைந்து இருந்தது போல் இருந்தது, அவளின் தலை முடி சீப்பில் இருந்தது. அத்தனை நெருக்கமாய் அவளை பார்த்ததே அவனுக்கு எதோ வெக்கம் வர வைத்தது. அவளை நினைக்கும் போதே மனம் ஆனந்தமாக இருந்தது.

காதல் வளரும் :purple_heart: