8. முதல் நீ.. முடிவும் நீ

8. முதல் நீ.. முடிவும் நீ
0

அஜய் இதை காதல் என்றே முடிவு செய்து இருந்தான். அவனுக்கு அவள் மீது இருந்த நேசம் புரிந்து போனது. எதோ ஒரு ஆனந்த அவஸ்த்தை அவனுக்கு, அவளை எண்ணியே மீண்டும் தூங்கி போய் இருந்தான்.

மாலை எழுந்து அவன் மணி பார்க்க ஆறு என்று காட்டியது. அவனின் மொபைல் வைக்கும் போது தான் கவனித்தான் அவளின் கணினி பாட புத்தகம் அங்கு இருந்தது. அஜு சிரித்து கொண்டே எடுத்து அதை அவன் அலமாரியில் வைத்து பூட்டி விட்டு ரிஷி, உதீப் காண சென்று இருந்தான். நண்பர்கள் பல கதை பேசி அவன் இல்லம் வர மணி எட்டு. வந்தவன் அவன் அறை சென்று ஃப்ரெஷ் ஆகி டிவி முன்னே அமர்ந்தான். காவ்யா வீட்டின் உள்ளே வந்தாள்.

கவி: " அத்தை என் கம்யூட்டர் புக் காணோம்"

விஜி: " நான் வீட்டில் பார்த்த மாதிரியே ஞாபகம் இல்லை, தேடி பாரு போ"

அவள் வீடு முழுதும் தேடி விட்டு அஜு அறை நுழைய, அஜய் சிரித்து கொண்டான். அவள் அங்கு தேடியும் கிடைக்காது போக, சோகமாக வந்து அமர்ந்து விட, அவளின் முகம் பார்த்த அஜய்,

அஜு: " என்னாச்சு கவி?"

கவி: " என் புக் காணோம்"

அஜு: " சரி நான் தேடி தரேன் நீ வீட்டுக்கு போ, நாளைக்கு லீவ் தானே? "

கவி: " ஆமா நாளைக்கு காலையில் கண்டிப்பா வேணும் ஹெச் டி எம் எல் (HTML) படிக்கணும்"

அஜு: " சரி தேடி தரேன் சரியா"

கவி: " ஏற்கனவே எனக்கு கம்ப்யூட்டர் சயன்ஸ் புரியாது, இதில் இது வேற காணோம், இன்னிக்கு நைட் கொஞ்சம் படிக்கலாம் இருந்தேன் எனக்கு அழுகையா வருது"

அஜு: " ஏய் அழாத டி, தேடி தரேன்"

கவி: " சரிண்ணா"

கவி தேடிக்கொண்டு இருக்க, அஜய் அவன் அலமாரியில் இருந்து எடுத்து வந்தான். அதற்குள் நேரம் ஆகி விட்டது என்று அவள் சென்று விட்டாள். காலை அவன் எழுந்து அவளை பார்க்க சென்றான்.

வீட்டின் முன்னே விசு, ரிஷி என அனைவரும் இருக்க இவன் கண்கள் தேடியது காவ்யாவை தான்.

விசு: " வா அஜய் எப்படி இருக்க?, பார்த்து ரொம்ப நாள் ஆச்சு? படிப்பு எல்லாம் எப்படி போகுது?"

அஜு: " நல்லா போகுது அங்கிள், நீங்க எல்லாரும் இல்லைன்னு குறை தான், மத்தபடி வேற எதும் குறை இல்லை."

சசி: " சரியா சாப்பிடு அஜய், விஜிக்கு ஒரே வருத்தம். தினம் காவ்யா அங்க போய் இருக்கா இப்போ எல்லாம் உங்க அம்மாவை சாப்பிட வைக்க, என் பையன் அங்க என்ன சாப்பிட்டு இருப்பான் யோசிச்சு எதும் சரியா சாப்பிடறது இல்லை, செய்யரதும் இல்லை. நீ நல்லா படிப்ப தெரியும் ஆனா உடம்பு மேல கவனமா இருக்கணும் சரியா?"

விசு: " போதும் விடு வந்த பையனை அட்வைஸ் பண்ணி ரம்பம் போடாதே"

அஜு: " கவி எங்கே ரிஷி? அவ புக் குடுக்கணும்"

ரிஷி: " மாடியில் படிக்கிறா, டேய் அவளுக்கு கொஞ்சம் கம்ப்யூட்டர் சயன்ஸ் சொல்லிகுடு, தினம் இம்சை பண்றா நான், உதீப் எல்லாம் சுத்தமான அறிவியல், இவளுக்கு நாங்க எப்படி சொல்லி தர முடியும் சொல்லு?"

“நீ இல்லன்னு நான் ரொம்ப ஃபீல் பண்ணேன் டா, அதில் இதுவும் ஒன்னு, கிளாஸ் ல புரியுது வீட்டுக்கு வந்து யோசிச்சு அழுகுறா, அண்ணா இருந்தா அண்ணாவே சொல்லி குடுப்பான்”

அஜு: " சொல்லி தரேன் டா "

விசு: " அப்போ அஜய் மதியம் நாங்க வந்துருவோம் அது வரை இங்கேயே இரு, சாப்பிட்டு போலாம் சரியா? அத்தை இன்னிக்கு பிரியாணி செய்ய போற"

அஜு: " சரி மாமா"

ரிஷி: " சரிடா அப்போ மதியம் பார்ப்போம்"

அஜு: " நீ எங்க போற?"

ரிஷி: " அட புது ஆர்டர் வந்து இருக்குடா கொஞ்சம் வேலை இருக்கு அதான் அப்பா கூட போறேன்"

சசி: " சீக்கிரம் வாங்க சரியா?"

விசு: " காவ்யாக்கும், அஜய்க்கும் முதலில் சாப்பாடு வை சரியா? நாங்க வர முன்ன பின்ன நேரம் ஆகலாம், நாலு நாள் தனியா விட்டு போய் இருக்கோம். அவளையும் அஜய்யையும் பார்த்துக்கோ நாங்க வரோம்"

அஜு: " உதீப் இல்ல அவனும் வெளிய போய் இருக்கான், நீயும் இல்ல போ டா, ஏன் டா லீவுக்கு வந்தேன் இருக்கு, சீக்கிரம் வந்துரு சரியா?"

ரிஷி: " சரி டா, வரேன்"

விசு, ரிஷி இருவரும் கிளம்பி வெளியே சென்றனர்.

சசி: " அவ மொட்டை மாடியில் இருக்கா போய் புக் குடுத்துட்டு கீழ வர சொன்னேன் சொல்லு"

அஜு: " சரி அத்தை"

அஜய் அவளிடம் வம்பு செய்ய மேலே வந்தான். அவளோ புக் மீது படுத்து வாயில் நீர் வழிய தூங்கி இருந்தாள்.
அஜு அதை பார்த்து சிரித்து, அவளை பெயர் சொல்லி அழைத்தான்.

அஜு: " நல்ல தூக்கம் போல, படிக்கிறேன் சொல்லிட்டு வந்து காலையில் ஏழு முப்பதுக்கே நல்ல தூங்கிட்டு இருக்க? இரு போய் அத்தைக்கிட்ட சொல்றேன்"

கவி: " அது நைட் சரியா தூக்கம் இல்ல, புக் காணோம் டென்ஷன்"

அஜு: " இந்தா உன் புக்"

கவி கண் விரித்து வாங்கி கொள்ள அவனுக்கும் அதில் சந்தோசம்.

கவி: “ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் அண்ணா”

அஜு: " கவி உன் புக் உனக்கு தேடி தந்தேன் தானே? எனக்கு அதுக்கு பதில் உன்கிட்ட ஒன்னு வேணும் தரியா?"

கவி: " என்ன அண்ணா வேணும்"

அஜு: " இனிமேல் என்னை அண்ணான்னு கூப்பிட கூடாது சரியா?"

கவி: " ஏன் அண்ணா?"

அஜு: " சொல்றேன் லா? அண்ணா சொல்லாதே நீ என் தங்கச்சி இல்ல, உனக்கு நான் அண்ணாவும் இல்ல"

கவி: " நீங்க என் அண்ணா இல்ல தான், ஆனா என் அண்ணன் ப்ரெண்ட் தானே? உங்களை வேற எப்படி கூப்பிடறது?"

அஜு: " மாமான்னு கூப்பிடு கவிக்குட்டி"

கவி: " முடியாது"

அஜு: " ஏன்?"

கவி: “தப்பா பேசாதீங்க அண்ணா பிளீஸ், நான் அப்படி எல்லாம் கூப்பிட மாட்டேன்”

அஜு: " தப்பா என்ன சொன்னேன், கவி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு, பிளீஸ் கவி அண்ணான்னு கூப்பிடாதே"

கவி: " பிடிச்சு இருக்குன்னா?"

அஜு: " அடி வாலு கேள்வி கேட்டுட்டே இருப்பியா? இப்போ சொல்ல வேண்டாம் நினைச்சுட்டு இருந்தேன், விட மாட்டே போல, லவ் யூ டி காவ்யா"

கவியின் முகம் கோபம் ஏறியது. அவனை முறைத்து பார்த்தாள்.

கவி: " ஏன் அண்ணா இப்படி பேசறீங்க? நீங்களும் காலேஜ் போய் மாறிட்டீங்க, தப்பா பேசாதீங்க அண்ணா"

அஜு: " ஏய் என்ன தப்பா பேசினேன் இப்போ? எதுக்கு அழுகுற மாதிரி இருக்கு உன் முகம்?"

கவி: " லவ் எல்லாம் சொல்லாதீங்க"

அஜு: " இங்க பாரு இது தப்பு இல்ல, இப்போ உனக்கு புரியுல அவ்ளோ தான், என்னை அண்ணான்னு கூப்பிடாதே இப்போதைக்கு சரியா? நான் உன்னை லவ் பண்றேன் கவி அண்ணா கூப்பிட்டு என் மனசை காயப்படுத்ததே பிளீஸ்"

கவி: " அதுக்கு வேற பொண்ணை பாருங்க, நான் லவ் பண்ண மாட்டேன், அப்பாக்கு பிடிக்காது"

கவி அழுது விட, அஜய் அவளை சமாதானம் செய்ய கை பிடித்தான்.

கவி : " எதுக்கு இப்போ தொடுறீங்க?, எனக்கு உங்களை பிடிக்கல, போங்க இல்ல அண்ணா அப்பாகிட்ட சொல்வேன்"

அஜு: " கவி"

கவி எழுந்து கீழே சென்று விட, அஜய் அவனையே திட்டிக்கொண்டு கீழே வந்தான்.

சசி: " வா, அஜய் வந்து சாப்பிடு, காவ்யா வந்து எடுத்து வை"

கவி: " எனக்கு பசி இல்லை, நீங்களே சாப்பிடுங்க"

சசி: " ஏய் உனக்கு கம்ப்யூட்டர் டவுட்டு சொல்லி குடுக்குறேன் சொல்லி இருக்கான். வா வந்து சாப்பிட்டு போய் படி"

கவி: " எனக்கு எந்த டவுட்டு இல்ல, நான் மிஸ் கிட்ட கேட்டுபேன்"

சசி: " சரி வந்து சாப்பாடு எடுத்து வை"

கவி வந்து சாப்பிட எடுத்து வைத்தாள். அவன் முகம் கூட பார்ப்பதை தவிர்த்து, அஜய்க்கு எதோ சொல்ல தெரியாத வலி. அவள் முகம் பார்த்தால் மன்னிப்பு வேண்டுவோம் என்று பார்த்தான், அதற்கு அவள் பார்த்தாள் தானே? சரியாய் சாப்பிடாமல் எழுந்து சென்று கை கழுவி விட்டு எதேதோ காரணம் சொல்லி மதியம் உணவு வேண்டாம் என்று தவிர்த்து வீடு வந்து சேர்ந்தான். அவன் இல்லம் வரும் போதே விஜி சாப்பிட அழைக்க, அங்கே சாப்பிட்டேன் என்று கூறி விட்டு அவன் அறை சென்று படுத்துக்கொண்டான்.

எதோ வலி அவனுக்கு, காலையில் எழும் போது இருந்த உற்சாகம் இப்போது இல்லை. அவளின் குரல் கேட்டு எழுந்து வந்தான். அவனுக்கு மதிய உணவு கொண்டு வந்து இருந்தாள். அவன் எழுந்து வருவதை பார்த்து அவசரமாக விடை பெற்று சென்று விட்டாள். அடுத்த நாள் அவள் சரியாக மதிப்பெண் எடுக்கவில்லை என்று அஜுவிடம் ரிஷி கூறி இருந்தான். அவன் பாடம் சொல்லி தருகிறேன் என்று வழிய சென்று கூறியும் அவனோடு அவள் பேசவில்லை. அவன் பத்து நாள் பொறுத்து பார்த்தான். அவளின் ஒதுக்கம் அதிகமாக அதிகமாக அங்கே இருக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. எழுந்த கோவத்தில் கிளம்பி ஹாஸ்டல் வந்து விட்டான். அவன் ஹாஸ்டல் வந்த செய்தி அறிந்து யாது வந்தான், அவன் வரவும் கவினும் வந்து சேர்ந்தான்.

அஜு விஷயம் சொல்ல, யாதுவிற்கு கோவம். கவின்னுக்கு வருத்தம்.

காதல் வளரும் :purple_heart: