9. முதலும் நீ.. முடிவும் நீ

9. முதலும் நீ.. முடிவும் நீ
0

யாது: " சின்ன பொண்ணுக்கிட்ட போய் என்ன பேசிட்டு வந்து இருக்க நீ?"

கவின்: " பொறுமையே இல்லையாடா உனக்கு? ரிஷிக்கிட்ட சொன்ன என்ன ஆகும் யோசிச்சு பேசுனியா?"

யாது: " இவனுக்கு எதுக்கு அதெல்லாம்? இவனை கவி அண்ணன் கூப்பிட்டது தானே இவன் பிரச்சனை"

கவின்: " சரி விடுடா, அவன் நேத்திலிருந்து சாப்பிடாம எதையோ இழந்த மாதிரி தான் இருக்கான்"

யாது: " காவ்யா கூட சேரனும் எண்ணம் இருக்கா இவனுக்கு? அந்த பொண்ணு படிக்கணும் இல்லையா? அதும் +2 முடிக்காத பொண்ணுக்கிட்ட போய் லூசு மாதிரி பேசி இருக்கான், காலேஜ் போன அவளுக்கே தெரிய போகுது அஜு அண்ணன் இல்லைன்னு, காதல் புரிஞ்சு போன அப்புறம் அவளே மாமான்னு சொல்ல போற, அதுக்குள்ள அவசரம்"

கவின்: " டேய் அஜு எழுந்தறி, வா சாப்பிட போலாம்"

யாது: " அஜய் என் முகம் பாரு, என்ன ஆச்சு இப்போ?"

கவின்: " இப்போ எழுந்தரிக்க போறியா இல்லையா?"

அஜு: " எனக்கு பசிக்கல"

யாது: " ரெண்டு விட்ட இப்போ தன்னால பசிக்கும் பாக்குறியா?"

அஜு: " போ டா"

கவின்: " டேய், அவன் ஏன் உன்மேல கோவப்படுறான்? நீயும் கவியும் சேரனும் தான், உங்க வீட்டில் கவி இருக்கா, அதும் சகஜமானு நீயே சொல்ற தானே? உங்க அம்மாக்கு இது தெரிஞ்சா? இல்லை அவங்க அம்மாக்கு கவி இதை சொல்லி இருந்தா என்ன ஆகும் யோசி?"

யாது: " உன் நல்ல பேர் போகும், உன் காதல் சரி தான் , அதை சொன்ன நேரம் தான் தப்பு, ரிஷி உன்னை தப்பா நினைச்சு பேசாம போய்ட்டா? யோசிச்சு பார்த்தியா இதை எல்லாம் ?"

அஜு: " இல்ல ரிஷிக்கு என்னை தெரியும். தப்பா நினைக்க மாட்டான். அவன் பேசாம போய்டுவனோ தான் எனக்கு இப்போ பயமா இருக்கு, கவி என்னை ஒதுக்கிட்டு போகட்டும். அவளுக்கு நான் சொன்னதே புரியுல, ஆனா ரிஷி என்னை ஒதுக்கினா என்னால தாங்க முடியாது, தப்பு தான் பண்ணிட்டேன் புரியுது"

கவின்: " சரி விடு நீ இப்போ தீபாவளிக்கு ஊருக்கு போகனும் தானே? அப்போ கவிக்கு சாரி சொல்லு, அவ ஸ்கூல் முடிக்கட்டும்"

யாது: " அவ காலேஜ் போகும் போது இதை சொல்லு சரியா? அப்போ அவ சொல்ற முடிவு தான் சரியா இருக்கும்"

கவின்: " போதும்டா பசிக்குது வாங்க"

பின் நாட்கள் ஓடியது, தீபாவளிக்கு முந்திய தினம் காலையில் அஜய் கோவை வந்து சேர்ந்தான். அவன் வீடு உள் வரும்போதே காவ்யா கவனம் இன்றி நேராக அவனை மோதினாள், இவன் நிலையோ அதை ரசிக்கும் எண்ணத்தில் இல்லை. ஆனால் அவளோ அவன் முகம் பார்த்து பதறி ஓடினாள். உள்ளே வந்தவன் தாயின் மடியில் படுத்துக்கொண்டான். பின் தூங்கி எழுந்து உதீப் இல்லம் சென்று, அங்கேயே ரிஷியை வர சொல்லி பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.

தீபாவளி காலை சரண் எண்ணெய் வேண்டாம் என்று அடம் பிடிக்க, ரிஷியும் கவியும் அவனை ஏமாற்றி எண்ணெய் தேய்த்து விட, காலையில் கலவரத்தோடு நாள் ஆரம்பம் ஆனது. பின் அனைவரும் குளித்து வர, சாமி கும்பிட்டு புது உடை அணிந்து, இனிப்பு சாப்பிட்டு ரிஷி பட்டாசுகளை எடுத்து வர, அஜய் வைத்த வெடியின் சத்தம் வீதியை எழுப்பி விட்டது.

அஜய் அதற்கு முன்பே எழுந்து இருந்தான். பின் இருவரும் வெடிக்க, சரண் அனைவருக்கும் வாழ்த்து சொல்லி, அப்பாவுடன் சேர்ந்து அவனும் வெடி வைக்க, அனைவரும் கவியை அழைக்க அவள் வர மாட்டேன் என்று கூறிவிட்டாள்.

தன்னால் தான் அவள் வெளியில் வரவில்லை போல என நினைத்து, அவன் பசிக்கிறது என்று கூறி, விடை பெற்று சென்று விட்டான். ஆனால் உண்மையில் கவிக்கு பட்டாசு என்றாலே பயம் தான். அஜய் அவன் இல்லம் சென்று கை கால் கழுவி, பசிக்கிறது என்று கூற, அவனுக்கு உணவு பரிமாறி கொண்டு இருந்தார் விஜி. அப்போது அங்கே வந்தாள் கவி,

கவி பிங்க் நிற ஓரங்கள் கொண்ட இளம்பச்சை நிற பட்டு புடவையில், அவள் தலை விரித்து, கொஞ்சம் முடியை நடுவில் கிளிப் போட்டு சேர்த்து, தலை நிறைய மல்லிகை பூ வைத்து, அவளின் கை வளையல்களும், கால் கொலுசும் சத்தமிட வந்து நின்றாள். அஜய்யின் மூளை சொல்வதை கேட்கும் நிலையில் அவன் மனம் இல்லை, அவளை பார்ப்பதையும் தடுக்க முடியவில்லை.

நெற்றில்யில் சிறு பொட்டு அதன் மேல் ஒரு கோடு சந்தனம், ஒப்பணையே இல்லாத முகம். இயற்கையில் நிறம் கூடி இருக்கும் அவளின் உதடு. அவளின் பால் நிறத்திற்கு எடுத்து குடுக்கும் அவளின் புடவை நிறம், அதில் தெரியும் அவளின் இடுப்பு என்று அவன் கண்கள் அத்துமீறி கொண்டு இருந்தது.

விஜி: " அஜய் சீக்கிரம் சாப்பிடு கோவில் போவோம்"

விஜியின் குரலில் அவன் தெளிந்து அவனை சமன் செய்து அவள் முகம் பார்க்க, அவளோ அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவனுக்கு அவளின் பார்வையின் அர்த்தம் புரியவில்லை. அவளோ அவன் பார்க்க தலைகுனிந்து நின்று விட்டாள்.

அஜய்: " வா காவ்யா சாப்பிடு"

கவி: " இல்ல நீங்க சாப்பிடுங்க"

விஜி: " வடை மட்டும் சாப்பிடு, உங்க அம்மா பருப்பு வடை தானே செய்து இருப்பாங்க?"

கவி: " வீட்டில் எல்லாரும் அதான் பிடிக்கும் எனக்கு உளுந்து வடை கேட்டேன் இல்லைன்னு சொல்லிட்டாங்க"

கோபி: " அப்போ இங்க சாப்பிடு, இங்க உளுந்துவடை தான்"

கவி: " கோவில் போய்ட்டு வந்து சாப்பிடுறேன்"

அஜய்க்கு அங்கு இருக்கவே முடியவில்லை, கட்டுக்குள் இல்லாத அவன் கண்கள் அவளையே தேட, அவளோ அவன் முகமே பார்த்து கொண்டு இருக்கிறாள். அவன் பார்த்தால் தலை குனிவது என்று அவளின் கண் பார்க்க விடாது அவளும் விளையாடி கொண்டு இருந்தாள்.

ரிஷியும் அஜய் இல்லம் வர, அவனை சாப்பிட விஜி அழைக்க, அவன் இனிப்பு கேக்க, அவனுக்கு குலாப் ஜாமூன் கொடுத்தார்.

அஜு: " அம்மா எனக்கு?"

விஜி: “டிபன் சாப்பிட்டு. காலையில் என்ன ஸ்வீட் இப்போ உனக்கு?”

அஜு: " அப்போ அவனுக்கு மட்டும் ராத்திரியா ? அவன் சாப்பிட்டு இருக்கான்?"

ரிஷி: " உன்கிட்ட ஜாமூன் காட்டினா வெறும் சக்கர பாவு தான் கிடைக்கும், அதுலயும் கவி கிட்ட காட்டினா அதும் கிடைக்காது, உங்களை எல்லாம் நம்பி ஸ்வீட் எப்படி தரது?"

அஜு: “கவிக்கும் ஜாமூன் பிடிக்குமா?”

ரிஷி: " அவளுக்கு பாகு சிந்த சிந்த சாப்பிடணும், அவளுக்கும் உன்னை போல பால்கோவா, ஜாமூன் தான் பிடிக்கும். குடுத்தா ரெண்டு பேருமே சட்டியை காலி பண்ணிருவீங்க"

கவி: " என்னை கிண்டல் பண்ணலேனா உனக்கு தூக்கமே வராதா?"

விஜி: " விளையாட்டுக்கு சொல்றான்டா, விடு"

சசி: " என்ன பண்றீங்க எல்லாரும், கோவில் போக வேண்டாமா? ரிஷி, கவி போங்க முன்னாடி கோவிலுக்கு சரண் வெளிய நிக்குறான்."

“விஜி, கேசரி குடு அஜுக்கு”

அஜு: " அத்தை போதும் வயிறு வெடிக்க போகுது, வர வர வீட்டுக்கு வந்த சாப்பாடு போட்டு பயம் காட்டுறீங்க"

சசி: " நான் செய்யல, கவி செய்தது."

அஜு மனதில் ’ அவசரப்பட்டு வேண்டாம் சொல்லிட்டியே அஜய், இனி கேட்டா சந்தேகம் வரும் வேண்டாம் விடு ’

அவனும் எழுந்து கிளம்பி வர, பக்கத்தில் உள்ள மகாலட்சுமி கோவில் சென்று சாமி கும்பிட்டு வீடு வந்து அனைவரும் சாப்பிட்டு, அஜு ஜாமூன் முழுங்கி, சரணின் நண்பர்கள் வீட்டிற்க்கு வர, ரிஷி, அஜு என்று அனைவரும் ஒன்று சேர புது படம் பார்க்க கிளம்பி சென்று விட்டனர்.

காதல் வளரும் :purple_heart: